நான் பொருட்காட்சிக்கு சென்று 15 வருடங்களாவது இருக்கும். பொருட்காட்சியை பற்றி மனதில் பசுமையான நினைவுகளே உள்ளன. குறிப்பாக இந்தியன் இரயில்வே ஸ்டால் மற்றும் தமிழக போக்குவரத்து துறை, போலீஸ் துறை ஆகியவற்றின் ஸ்டால்கள் நன்றாக இருக்கும்.
இந்த சனிக்கிழமை 2008 பொருட்காட்சிக்கு செல்லலாம் என்று மிகுந்த ஆவலோடு சென்றேன். மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. மொத்தமாக 10 ஸ்டால்களே உள்ளன அவை அனைத்துக்கும் தனியாக கட்டணம் வசூல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு தெரிந்து ஸ்டால்களுக்கு முன்பெல்லாம் கட்டணம் கிடையாது.
சரி கட்டணம் வசூல் செய்கிறார்களே உள்ளே விஷயம் எப்படி என்றால் மிக கொடுமை. மீன் மற்றும் பறவை காட்சிக்கு தலா 3 ரூபாய் வாங்கினார்கள். நன்றாக இருந்தது.
அடுத்து பேய் மாளிகை அது இது என்று ஸ்டால் இருந்தன. 10 ரூபாய் கட்டணம். சரி போய் பார்க்கலம் என்று போனால். உள்ளே கும்மிருட்டு. நான்கு அறைகள் ஒவ்வொன்றிலும் விளக்கு அணைந்து அணைந்து எறிந்து கொண்டு இருந்தன. ஒவ்வொரு அறையிலும் ஒரு பேய் பொம்மை. சில சிறுவர்களை திடீரென்று இருட்டில் நடந்து வர செய்கிறார்கள் கும்மிருட்டில் யார் முகமும் தெரியவில்லை. லண்டண் மேடம் டுஸ்ஸாட் போல வர முயற்சி ஆனால் அதில் 0.5 % கூட வரவில்லை. இதில் பயம் என்னவென்றால் உள்ளே எவனாவது பர்ஸை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டால் அவ்ளோதான்.
இதை தவிர எல்லாம் துணி, பெண்கள் அலங்காரம் மற்றும் திண்பண்ட கடைகள். அப்பளம் ஒரு அளவுக்கு பரவாயில்லை ஆனாலும் மிளகாய் பொடிக்கு பதிலாக வேறு பொடி எதையோ போடுகிறார்கள்.
நாள் செல்ல செல்ல எல்லாம் நன்றாக ஆகும் என்று பார்த்தால் எல்லாம் குட்டி சுவராக போய்க்கொண்டிருக்கிறது.
ஆனால் கூட்டம் சரியான கூட்டம்.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
Ikiru
Just finished watching this movie and what a profound movie. This is my first Akira Kurosawa movie and I was simply blown away by the movie....
-
The title of this blog is a famous title of Rajesh Kumar's tamil novel. Those who are familiar with tamil novels must have heard of Raje...
-
நான் பொருட்காட்சிக்கு சென்று 15 வருடங்களாவது இருக்கும். பொருட்காட்சியை பற்றி மனதில் பசுமையான நினைவுகளே உள்ளன. குறிப்பாக இந்தியன் இரயில்வே ஸ்...
-
Sometimes our life seems to be like the Truman show. We see the same thing daily. We live the same routine day by day. For me when I start w...
51 comments:
தூய தமிழ் படிக்க மிகவும் நன்றாக உள்ளது. நிறைய ஏழுதுங்கள்!!!
Very nice to read about the Island grounds exhibition. I have great memories of that place and the exhibitions. It starts from late 60's when my Dad used to take us there. I have wondered at those giant wheels in those days. As you said, as years roll by, we expect good changes but sad to know that it has not improved. Very sad to know that there only 10 stalls. Did they have a lady and a man riding motorcycle inside a well like structure. We have always wondered as kids in those places.
thanks anon i will dfntly try to write more in tamil.
Balaji,
No well no motorcycle. They used to have magic show, dog show, wierd mirror room etc etc all gone. nothing is there.
Post a Comment