Search This Blog

Sunday, November 05, 2006

Barber Shop



முடி திருத்தகம் இதற்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் ஒரு பெரிய தொடர்பு உள்ளது. ஆனால் நான் இப்பொழுது பேச இருக்கும் காரியம் வெறும் முடி திருத்துதலை பற்றியது. இது வரை ஒரு முறை கூட முடி வெட்டிய பிறகு முழு திருப்த்தியோடு வீடு திரும்பியதாக சரித்திரமே இல்லை. நாம் ஒரு வகையாக வெட்ட சொன்னால் அவர்கள் எப்பொழுதுமே வேறு வகையாக தான் வெட்டுவார்கள். எப்பொழுதுமே கட்டையாக வெட்ட சொன்னால் வெட்ட மாட்டார்கள். முடி வெட்டினோமா இல்லையா என்று நமக்கே குழப்பமாக இறுக்கும். இன்னும் கொஞ்சம் வெட்டுங்கள் என்று சொன்னால் "உங்கள் முடி படியாது ஸார்" என்று அறிவுறை கூறுவார்கள். "பராவாயில்லை நீங்கள் வெட்டுங்கள்" என்று சொன்னால் வெட்டுவதை போல சிறிது நேரம் பாவ்லா காட்டி விட்டு "இப்பொழுது ஓ.கே வா ஸார்" என்பார்கள். நானும் வேறு வழி இல்லாமல் "சூப்பர் ஸார்" என்று விட்டு ஏமாற்றப்பட்ட உணர்வோடு வீடு திரும்புவேன்.

இது சென்னையில் மட்டுமல்ல நான் எங்கெல்லாம் சென்றிருக்கிறேனோ அங்கெல்லாம் இதே கதை தான். வெகு சில நேரங்களில் மிகவும் கட்டையாக வெட்டி விடுவார்கள். இதற்கு வீட்டில் "என்னடா முடி வெட்டினா மாதிரியே இல்லை" அல்லது "என்னடா இவ்ளோ கட்டையாக வெட்டி இருக்கிறாய்" என்று கிண்டல் வேறு. "உனக்கு வாய் சாமர்த்தியம் பத்தாது" என்று மற்றுமொரு கருத்து வேறு.

5 comments:

cowey said...

ha ha ha ..this barber syndrome should as old as Babur :-)

cowey said...

ha ha ha ..this barber syndrome should be as old as Babur :-)

Anonymous said...

hey dany...post something no..

Anonymous said...

@shalini,

here posted a comment :-P

Anonymous said...

LoL :-)

Ikiru

Just finished watching this movie and what a profound movie. This is my first Akira Kurosawa movie and I was simply blown away by the movie....