Search This Blog

Tuesday, May 29, 2007

சென்னையில் பாம்பு

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு சர்ச்சுக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன் ஒருவன் ஓடி வந்தான். "பாம்பு பிடிக்கிறவர் போன் நம்பர் வேண்டும்" என்றான். எங்கள் வீட்டுப்பக்கம் பாம்புகள் நடமாட்டம் உண்டு. என் தம்பியை கூப்பிட்டு வாங்கி கொடுத்தேன்.

சர்ச்சு முடிந்து வந்தவுடன் அவர்கள் பிடித்தது ஒரு பெரிய சாரை பாம்பு என்று அற்ந்து கொண்டேன். பார்த்தவர்கள் அது மிகவும் பெரிதாக இருந்ததாக கூறினர்.

இதற்கு முன்பு பலமுறை பாம்புகள் வந்துள்ளன, இதில் கஷ்டம் என்ன என்றால் அவைகள் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தாலும் நமக்கு அவைகள் தெரியாது. எங்கேயாவது எதையாவது நோண்டும் போது விருட்டென்று வெளியே வரும். கடவுள் தான் ஒவ்வொரு முறையும் அதை கண்களில் பட வைக்கிறார்.

**

சிவாஜி டிரைலர் பார்த்தே, ரஜினி மிகவும் அம்சமாக உள்ளார். எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. சீக்கிரம் வாங்க சிவாஜி.

2 comments:

Unknown said...

Ramesh indha font romba kashtama iruku decipher panni understand panna...

Dany said...

try increasing your fount size and see. it shld be legible

New World (2013) - Korean

 Korean movies rarely disappoints. New World was in my watchlist for a long time. To watch Korean movies or for that matter any foreign lang...