Search This Blog

Wednesday, December 05, 2007

பெரியார்

ஒரு செய்தி படித்தேன் "யார் தடுத்தாலும் சென்னையில் 94 அடி உயர பெரியார் சிலையை நிறுவியே தீருவேன்" என்று கலைஞர் கூறியிருக்கிறார். இதை எதற்காக செய்கிறார் என்றால் திராவிட இயக்க வீரமணியின் வேண்டுகோளின் பெயரில். அதில் இருவர் மனம்விட்டு சிரிப்பது போல ஒரு புகைப்படம் வேறு.

இப்பொழுது தமிழ்நாட்டிற்கு இன்றியமையாத தேவை 94 அடியில் ஒரு பெரியார் சிலை தான். அதை போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் சென்னையில் வைத்து இன்னும் நெருக்கடியை உயர்த்தி விட்டால் எல்லா நலமும் வந்து விடும்.

நம் ஊரில் ஒரு சிலையை ஒரு இடத்தில் வைத்துவிட்டால் பிறகு எக்காரணத்தை கொண்டும் அதை எடுக்க முடியாது. இந்த சிலை நந்த பிறகு ஒரு ஒரு பெரியாரின் பிறந்த, இறந்த நாளின் போதும் மாலை போடுகிறேன் பேர்வழி என்று போக்குவரத்து நெரிசல் அதிகமாகும். சில வேலையில்லாதவர்கள் அச்சிலையை அவமதிப்பதால் கலவரம் உண்டாகும். இவ்விரண்டு காரியங்களை தவிர வேறு ஒன்றும் நடந்து விடாது.

இது என்னவோ அவர்களின் சொந்த வீடு போல அதை செய்வேன் இதை செய்வேன் என்று ஒன்றுக்கும் உதவாத அரசியல் செய்து வருகிறார்கள். அடுத்த தேர்தலின் போது வீரமணி யார் பக்கம் இருப்பார் என்று அந்த வீரமணிக்கே தெரியாது.

அடுத்த கொடுமை டீவி கொடுக்கிறேன் என்று ஒரு ஒரு நாளும் கலைஞர் செய்திதாளில் சிரிக்கிறார். என்னவோ அவருடைய சொந்த செலவில் கொடுப்பது போல விளம்பரம் வேறு. இது எல்லாம் நம்முடைய வரி பணம் இப்படி எதையோ மக்களிடம் இருந்து திசைதிருப்புவதற்காக மக்கள் செலவில் டீவி கொடுத்து சாதித்து கொண்டிருக்கிறார்கள்.

வள்ளியில் ரஜினி சொல்வார் இலவச பொருள் கேட்காதீர்கள் வேலைவெட்டி கேளுங்கள் என்று ஆனால் நம்முடைய ஜனமோ இலவச பொருளே சொர்க்கம் என்று பல்லை இளித்து வாங்கி கொண்டு இருக்கிறது.

இந்த மழை காலத்தில் ஒரு நல்ல சாலை உள்ளதா?

நாம எல்லாம் பாவம் செய்திருக்கோம் அதனால் தான் இப்படி பட்ட அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறோம். நமக்கு விமோசனமில்லை.

4 comments:

வாசு said...

நல்ல நசசுன்னு சொன்னிகங்க நன்பறே ஆனா அப்பவும் இந்த் ஜன்மங்கள் திருந்தாது.

Dany said...

நம்ம வலைப்பதிவு பக்கம் வந்ததற்கு நன்றி நண்பரே.

Anonymous said...

TV vaangi enga veetla velai seiyaravanga vera orutharukku vithuttangalam!! ena avanga veetla current illai !!??!! mothalla current kudukka sollunga!!

Dany said...

nambala kati potu namba udambukule than current kodupaanga

New World (2013) - Korean

 Korean movies rarely disappoints. New World was in my watchlist for a long time. To watch Korean movies or for that matter any foreign lang...