Search This Blog

Saturday, September 13, 2008

Singur

சிங்கூர் பல நாட்களாக செய்திதாள்களில் அடிபட்டு கொண்டுள்ளது. விவசாய நிலங்களை தொழில்சாலைகள் கட்டுவதற்கு கொடுப்பது சரியா என்ற ரீதியில் பிரச்சனை இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு பாராட்டலாம். ஆனால் அவர்களோ நீங்கள் எங்களுக்கு எங்கள் நிலங்களுக்கு கொடுக்கும் விலை குறைவாக உள்ளது என்று குரல் எழுப்பி உள்ளார்கள்.

மம்தா இதில் இருந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தன்னுடைய பெயரை மேலும் பிரபலபடுத்தி கொண்டார்.

இது என்னவோ வாங்க தேசத்து பிரச்சனை போல மற்றவர்கள் ஒதுங்கி இருப்பது சரி இல்லை. இது நம் ஒட்டு மொத்த இந்தியாவை அச்சுறுத்தும் ஒரு பிரச்சனை. விவசாயத்துக்கு மாற்றாக பல தொழில்களை கொண்டு வருவது சரியா? நல்ல விளையும் நிலங்களை இப்படி இழந்து விட்டால் திரும்ப கிடைக்குமா? அல்லது அப்படி கொடுக்கும் ஒவ்வொரு நிலத்துக்கும் மாற்று நிலம் கொடுக்கபடுகிறதா? அப்படி இல்லை எனில் சாப்பாட்டுக்கு திண்டாடும் நிலை சீக்கிரம் வருகிறது.

மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் விவசாயமும், தொழில்களும் இணைந்து வளர்க்கப்படுகின்றன ஆனால் நம் ஊரில் இரண்டுக்கும் முக்கியத்துவம் இல்லை. தனி மனித வளர்சியே முக்கியத்து படுத்த படுகிறது.

No comments:

Sunset Boulevard

When I started watching this movie I didn't know what I was getting into. The IMDB poster showed a woman looking weird.  So when I final...