Search This Blog

Sunday, April 18, 2010

மாற்றம்

ஒரு காலத்தில் நான் பார்த்து வியந்து ஆசைப்பட்ட பல விஷயங்களை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு பிற்பால் எங்களுக்கு கிடைத்தது. அந்த விஷயங்களை பக்கத்து வீட்டிலோ நண்பர்கள் வீட்டிலோ பார்க்கும் பொழுது மனதில் ஒரு ஏக்கம் ஒருவாகும். ஆனால் நான் எனக்கென்று ஒன்று வேண்டும் என்று ஆசைப்பட்ட எல்லா பொருள்களையும் பிற்பாடு வாங்கிக் கொள்ளும் சக்தி எங்களுக்கு கொடுக்கப்பட்டது.

அப்படி பக்கத்து வீட்டைப் பார்த்து ஏங்கிய பொருட்களில் ஒன்று ஃப்ரிட்ஜ். எனக்கு பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் ஃப்ரிட்ஜ் இருந்தது. என்னுடைய பள்ளி நண்பர்கள் சிலரின் வீட்டிலும் இருந்தது. அவர்கள் வீட்டுக்கு செல்லும் பொழுதெல்லாம் அந்த குளிர் பதனப்ப்ட்டியை பார்த்து ரசிப்பேன். குறிப்பாக உள்ளே இருக்கு ஃப்ரீஜர் மிகவும் பிடிக்கும். அதில் இருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து ஜூஸில் அவர்கள் போடும் காட்சி பார்க்க நன்றாக இருக்கும். கதவை திறந்தௌடன் எறியும் அந்த விளக்கையும் பிடிக்கும். என் வீட்டில் குடம், மண் பானை என்று தண்ணீருக்கு வைத்திருக்க அவர்கள் வீட்டில் கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் நிர்ப்பி வைத்திருப்பார்கள். ஃப்ரிட்ஜ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை உண்டு. இந்த ஆசை சிறியவனாக இருந்த எனக்கு மட்டும் இல்லை பெரியவர்களுக்கும் இருந்தது. நான் மட்டும் ஃப்ரிட்ஜ் வாங்கினால் தினமும் ஐஸ்க்ரீம் வீட்டிலேயே செய்து சாப்பிடுவேன் என்று மனதில் நினைத்துக் கொள்வேன்.

ஃப்ரிட்ஜ் வைத்திருந்தால் பணக்காரர்கள் என்று பெயர் அப்பொழுதெல்லாம்.

பிற்பாடு எங்கள் வீட்டில் ஒரு பச்சை நிற செகண்ட் ஹேண்ட் கெல்விநேட்டர் ஃப்ரிட்ஜ் வாங்கினார்கள். என்ன ஒரு சந்தோஷம் அப்பொழுது. உடனே ஐஸ்க்ரீம் மிக்ஸ் வாங்கி வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்தோன். அதன் வாசனையையும் ருசியையும் இன்னும் என்னால் உணர முடிகிறது.

எங்கள் வீட்டில் ப்ரிட்ஜ் வந்தாலும் இன்னும் பலரது வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை அதனால் பலர் எங்களிடம் ஐஸ் வாட்டர், ஐஸ் கட்டிகள் என்று கேட்டு வருவார்கள். ஆரம்பத்தில் சந்தோஷமாக கொடுத்தோம் பிறகு என்னடா இது ஒரே தொந்தரவா போச்சு என்னும் அளவுக்கு மாறியது.

சிலர் வீட்டில் மாத்திரம் ப்ரிட்ஜை திறந்தால் உள்ளே இருக்கும் பொருள்கள் ஒரு வித க்ளாஸி லுக் கொடுக்கும். ஆனால் நம் வீட்டில் மாத்திரம் ஃப்ரிட்ஜினுள் பலவித பாத்திரங்கள் மாத்திரமே இருக்கும்.

இப்படி பல வித ஆசைகளோடு வாங்கிய ஃப்ரிட்ஜ் இன்று வீட்டில் மற்றும் பொரு பொருள் என்று ஆகிப்போனது. ஃப்ரிட்ஜ் தண்ணீர் உடம்புக்கு ஆகாது என்று ஆகிப்போனது. இந்த பல வருடங்களில் விரல் விட்டு என்னௌம் முறை மட்டுமே ஐஸ்க்ரீம் செய்திருக்கிறோம். இட்லி மாவு, நேற்றைய சாம்பார், ரசம், கருவேப்பிலை கட்டு என்பனவற்றை வைக்க மட்டுமே இப்பொழுது அந்த ப்ரிட்ஜ் உபயோகப்படுகிறது.

No comments:

Sunset Boulevard

When I started watching this movie I didn't know what I was getting into. The IMDB poster showed a woman looking weird.  So when I final...