Search This Blog

Sunday, May 16, 2010

நிகழ்வுகள்

எவ்வளவு பேர் இதை கவனித்திருப்பீர்கள் என்பது தெரியவில்லை ஒரு வேளை நான் குறிப்பிட போகும் மக்களில் ஒருவராக நீங்களே இருக்கலாம். தெருவோரங்களிலோ அல்லது சில நகரத்தை விட்டு சற்று தள்ளி இருக்கும் இடங்களிலோ இருக்கும் சிறு உணவகங்களை கவனித்துப் பாருங்கள். நான் குறிப்பிடும் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட இடம் இருக்காது. கையில் வைத்துக் கொண்டே தான் சாப்பிட வேண்டும். சில இடங்களில் நீல நிற பிளாஸ்டிக் ஸ்டூல் போட்டிருப்பார்கள்.

இதை போன்ற உணவகங்களை அதிகம் உபயோகிப்பவர்கள் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களே. அதிலும் அதிகம் இளைஞர்களையே காண முடியும். இதில் ஆட்டோ டிரைவர்களும் டாக்ஸி டிரைவர்களும் அடக்கம்.

சரி இதில் என்ன விசேஷம் என்பவர்களுக்கு இதோ விஷயத்திற்கு வந்துவிட்டேன். அங்கே சாப்பிடுகிறவர்களை உற்று கவனித்தால் அவர்கள் எல்லார் முகத்திலும் ஒரு ஏக்கம் இருப்பதை காண முடியும். அந்த இட்லியை வாங்கி சாம்பாரில் முக்கி உண்ணும் பொழுது அவர்கள் அந்த உணவகத்தாரை ஒரு தாயை போல பார்ப்பதை காண முடியும். அது மட்டுமில்லை பல இடங்களில் இப்படி கடை நடத்துபவர்கள் தம்பதியினராகவே இருப்பார்கள். கணவர் இட்லி அவித்துக் கொண்டிருக்க மனைவி வருபவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருப்பார். அவர்கள் பரிமாறுவதிலும் ஹோட்டல்களில் பார்க்க முடியாத ஒரு நேசத்தை காணமுடியும். உண்பவர்களும் உரிமையோடு எக்ஸ்ட்ரா சாம்பார் மற்றும் சட்டினி கேட்பார்கள்.

தினமும் அங்கே செல்பவர்களோடு ஒரு புது மனிதன் சேர்ந்து விட்டால் அந்த புதியவன் முன்பு கடைக்காரனிடம் அதிக அன்பு பாராட்டி "இந்த கடைக்காரர்கள் எனக்கு நன்கு தெரிந்தவர்கள்" என்பதை போல வெட்டி பந்தா வேறு.

இந்த கடைகளில் பிரதானமாக கிடைக்கும் ஐட்டங்கள் இட்லி, தோசை, சாம்பார், சட்டினி, பூரி கிழங்கு.

பக்கத்தலேயே ஒரு நீல நிற பக்கெட்டில் கை கழுவ நீர் இருக்கும்.

3 comments:

Anonymous said...

sex [url=http://pornushi.ru/english-version/gay-sex/doc_646.html]yr old teen[/url]

Balaji S Rajan said...

Good observation Dan.

Unknown said...

What to do? Life has to go... like me there are so many people. As far as my concern Hygienic is there in Thalluvandi only not it Sangeetha or saravana bhavan. Thalluvandi fastfood people they won’t use agenamotto and plastics so this is the way its gud :/)

Ikiru

Just finished watching this movie and what a profound movie. This is my first Akira Kurosawa movie and I was simply blown away by the movie....