Search This Blog

Wednesday, June 09, 2010

கலைஞர்

கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் நடந்து வரும் அரசியலை கவனிக்கும் பொழுது சற்று கவலையாகவே உள்ளது. தமிழ் நாட்டில் அனைத்து துறைகளிலும் கலைஞர் மற்றும் அவரை சேர்ந்தவர்களே உள்ளனர். பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி போன்ற எல்லா துறையில் அவரின் குடும்பத்தை சார்ந்தவர்களே உள்ளனர்.

ஆனால் இதைவிட கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் இப்பொழுது ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்பதைவிட மன்னர் ஆட்சி நடப்பது போல் தான் உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் நாராவது ஒருவர் அல்லது ஒரு கூட்டம் கலைஞரை புகழ்ந்து கொண்டும் பாராட்டிக் கொண்டும், பாடிக்கொண்டும் உள்ளனர். இதை பார்க்கும் பொழுது பண்டை காலத்தில் புலவர்கள் மன்னர்களை ப்கழ்ந்து பாடுவது போலவே உள்ளது.

அது மட்டுமல்லாமல் எதை எடுத்தாலும் இலவசம் என்பதை போல ஆகிவிட்டது. ஏதோ தன் சொந்த பணத்தில் இருந்து கொடுப்பது போல வாரி வழங்கி கொண்டு இருக்கிறார். ஆனால் அது வழக்கம் போல முழுவதுமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்வதில்லை.

அடுத்த தேர்தலும் அருகில் வந்துவிட்ட சூழ்நிலையில் இன்னும் பல வாக்குறுதிகள் வழங்கப்படும். மக்களும் கிடைக்கப்போகும் ஒரு நொடி இன்பத்துக்காக தங்கள் வாழ்க்கையை அடமானம் வைக்கத் தயங்கமாட்டார்கள்.

சரி அப்படி என்றால் ஜெ வுக்கே அடுத்த வோட்டை போடலாமா என்று கேட்பவர்களுக்கு என்னுடைய பதில் உங்களுக்கு mild masochism பிடிக்கும் என்றால் கலைஞரிடம் செல்லுங்கள் severe masochism பிடிக்கும் என்றால் ஜெ விடம் செல்லுங்கள். இருவரிடமும் கிடைப்பது torture தான் ஆனால் கொடுக்கும் விதத்தில் தான் வித்தியாசம்.

கலைஞர் என்ற வார்த்தையை வேண்டுமென்றே தான் உபயோகித்துள்ளேன். ஏனென்றால் அவரின் பெயரை சொல்லி யாரும் இப்பொழுதெல்லாம் அழைப்பதில்லை.

1 comment:

Unknown said...

Ur the Genious one Politics. Y don’t you join in Political line? If U joined at lease things will be like Aaydu Ezhuthu movie. Everybody knows very well what are they doing? but people are don't bother what they doing bcoz selfishness people.

Ikiru

Just finished watching this movie and what a profound movie. This is my first Akira Kurosawa movie and I was simply blown away by the movie....