Search This Blog

Wednesday, June 23, 2010

இராவணன் - Ravanan

இந்த திரைப்படத்தை நண்பர்களுக்காக சென்று பார்த்தேன். படத்தில் போஸ்டர்களே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டவில்லை. எல்லா போஸ்டரிலும் விக்ரமும் ஐஸ்வர்யாவும் முகத்தில் கரி, சேறு, சந்தனம் என்ற எதையாவது ஒன்றை பூசிக்கொண்டு கோபமாக பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

படம் ஆரம்பித்தது ஏனோ ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் என்ற டைட்டில் போடும் போதே மனம் அதில் ஒன்றவில்லை. எடுத்த உடனே பல விதமான காட்சிகளை மலை உச்சியில் நிற்கும் விக்ரம், போலீஸ் ஜீப், திருவிழா, போலீஸ் என்று காட்டி ஐஸ்வர்யாவை கடத்துகிறது விக்ரமின் கூட்டம். அதில் தண்ணீருக்கு அடியில் இருந்து கடகின் நுனியை படம் பிடித்திருப்பது ஒரே ஒரு நொடி "அட" சொல்ல வைக்கிறது.

மற்றபடி கோமாளியை போல நடந்து கொள்ளும் விக்ரம் ஐஸ்வர்யாவை கடத்தி யாருக்கும் புரியாத மாதிரி ஏதோ பேசுகிறார். ஐஸ்வர்யாவும் இது ஒரு மிகப்பெரிய வேடம் என்று நினைத்துக் கொண்டு மனதில் ஒன்றாத வசனங்களை பேசுகிறார். வசனம் - சுஹாசினி.

சட்டென்று பிரித்விராஜை காட்டுகிறார்கள் காட்டும் பொழுதே நான் தான் வில்லன் என்பதை போல நடந்து கொள்கிறார் கதைப் படி ராமனாய் இருக்க வேண்டியவர்.

திடீரென்று ஐஸ்வர்யா மலையில் இருந்து குதிக்கிறார் அவர் பின்னால் விக்ரமும் குதிக்கிறார். பிறகு இருவரும் ஏதோ ஒரு காட்டுக்குள் நடந்து வந்து ஒரு காட்டுவாசி கூட்டத்தை அடைகிறார்கள்.

எப்பொழுதும் மழை பெய்து கொண்டே இருக்கிறது.

கடைசியில் பிரித்திவிராஜ் ஐஸ்வர்யாவை மீட்கிறார். அதன்பின் ஒரு ஐந்து நிமிடம் மேலும் படம் ஓடி முடிகிறது.

தளபதி, ரோஜா, மொளன ராகம், அஞ்சலி போன்ற படங்களை கொடுத்த மணிரத்ணமா இதை எடுத்தது என்ற பிரம்மிப்போடு எல்லோரும் வெளியே வருகிறார்கள்.

ஒன்று மட்டும் புரிகிறது ஒரு படைப்பாளனுக்கு தன்னுடைய படைப்பு எப்பொழுது நன்றாகவே படும். அதில் அவன் மீது குறையில்லை. சில நேரங்களில் அவனின் படைப்பு மற்றவர்களால் ரசிக்கப்டுகிறது. பல நேரங்களில் அவனின் படைப்பு அவன் மனதில் தோன்றுவது போல அவ்வளவு நன்றாக இல்லை என்பதை அவனால் உணர முடிவதில்லை.

No comments:

Ikiru

Just finished watching this movie and what a profound movie. This is my first Akira Kurosawa movie and I was simply blown away by the movie....