
ஜீவாவின் நண்பனிடம் ஜீவா : என்ன கேட்டே ஏன் பொத்துகிட்டு வருதுன்னு தானே. பொத்துகிட்டு வர்ரதுக்கு பேர்தான்டா ரெளத்திரம்.
படம் ரீலிஸாவதற்கு முன்னமே இப்படத்திற்கு டிக்கெட் புக் செய்து விட்டேன். படம் வெளியான பிறகு பல இணைய தளங்களில் இப்படத்தின் விமர்சனத்தை குறித்து படித்த பொழுது சற்று பயந்தே போனேன் இது மற்றொரு ஆழ்வாராக இருக்குமோ என்று.
இப்படம் எந்த வகையிலுமொரு புதிய முயற்சி அல்ல. பல காட்சிகள் எங்கோ பார்த்த ஒரு உணர்வை கொடுத்தாலும் என்னால் இப்படத்தை ரசிக்க முடிந்தது. இது சென்னையின் இருட்டு மூலைகளில் நடமாடும் மனிதர்களைப் பற்றிய கதை. படம் முழுக்க பல விதமான வில்லன் கதாபாத்திரங்கள் வருகிறார்கள்.
பொல்லாதவன், நான் மகான் அல்ல (கார்த்தி) படத்தை பார்த்தவர்களுக்கு இதில் வரும் காதபாத்திரங்கள் மிக பரிச்சயமாய் இருக்கும்.
சென்னை ராயபுரம் தாதக்களுக்கும் ஜீவாவிற்கும் இடையே நடக்கும் போரே கதை. ஜீவா அறிமுகமாகும் காட்சி முதல் வரும் அனைத்து சண்டை காட்சிகளிலும் அத்தனை ரெளத்திரம். ஒரு ஒரு அடியும் இடியை போல இறங்குகிறது. ரோட்டில் இஷ்ட்டத்திற்கு வண்டியோட்டுபவர்களிடம் ஆரம்பிக்கும் ஜீவாவின் ரெளத்திரம் படம் நெடுக தொடர்கிறது. ஒரு கடத்தப்படும் பெண்ணை காப்பாற்ற ஜீவா போடும் சண்டையில் ஒரு கேஸ் ஸிலிண்டரால் ஜீவா வில்லனை அடிக்கும் பொழுது அதை தியேட்டர் ஸீட்டில் உணர முடிகிறது. பின்னை பார்க்கிங் லாட்டில் நடக்கும் சண்டை, கிளைமாக்ஸ் சண்டை என அனைத்தில் ஜீவா பின்னியெடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு வில்லனை பார்க்கும் பொழுது இப்படிப்பட்ட மக்கள் உண்மையிலேயெ இருக்கிறார்கள் என்ரு நினைக்கும் பொழுது இதயம் பக்கென்கிறது. குறிப்பாக ஒவ்வொரு வில்லனும் பேசும் விதங்கள் மிக தத்ரூபமாய் இருந்தது.
ஷ்ரேயா படம் நெடுக வருகிறார். கிளைமாக்ஸில் முக்கிய இடம் இவருக்கு. ஜீவாவின் பாசமிகு குடும்பமாக பழகிய முகங்கள். கிளைமாக்ஸ் ஏனோ எனக்கு American History X படத்தின் கிளைமாக்ஸை நினைவு படுத்தியது.
பாடல்கள் மிக சுமார்.
பெண்களுக்கு படம் பிடிப்பதற்கான வாய்ப்பு குறைவு படம் முழுக்க வன்முறை இருக்கிறது. ஆனால் எனக்கு இந்த படத்தில் பிடித்ததோ அந்த வன்முறை தான். ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஒரு சல்யூட். உங்களுக்கு நான் மகான் அல்ல, அஞ்சாதே, பொல்லாதவன் போன்ற படங்கள் பிடித்திருந்தால் இப்படமும் பிடிக்கும்.
No comments:
Post a Comment