Search This Blog

Showing posts with label Automobile. Show all posts
Showing posts with label Automobile. Show all posts

Wednesday, July 25, 2007

பஜாஜ்

தொலைக்காட்சியில் வரும் பல விளம்பரங்களில் சில விளம்பரங்கள் நமக்கு பிடித்துப்பொவது உண்டு. அதிலும் மிக சொற்ப பொருட்களின் விளம்பரங்களில் எல்லா விளம்பரங்களும் பிடிப்பது அபூர்வம். உதரணமாக "7 அப்" அந்த கார்ட்டூன் விளம்பரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்பொழுது நான் பேச வந்தது அதை பற்றி அல்ல பஜாஜ் விளம்பரங்களை பற்றி.

பஜாஜ் கடந்த சில வருடங்களில் ஹீரோ ஹோண்டாவை தூக்கி சாப்பிட்டுவிட்டது என்றே சொல்லலாம். பைக்கில் மட்டும் அல்ல விளம்பரங்களிலும் தான். ஒவ்வொரு பஜாஜ் விளம்பரமும் அற்புதமாக உள்ளது. அவர்களது பல்ஸர், டிஸ்கவர், கலிபர் அனைத்து விளம்பரங்களும் கண்ணுக்கு விருந்து. மிகவும் மாறுபட்ட சிந்தனை அடங்கியது. மற்ற நிறுவனங்கள் மிகவும் பழைய கால ஐடியாவோடே விளம்பரம் கொடுத்து கொண்டு இருக்க பஜாஜோ எங்கேயோ சென்று விட்டது.

குறிப்பாக இப்பொழுது வரும் பல்ஸர் விளம்பரம் அருமை. ஒரு பைக்கில் இருந்து பல பைக்குகள் வந்து, பிறகு அனைத்தும் ஒன்றாக இணைவது அருமை.

பஜாஜின் வெற்றிக்கு நிச்சயமாக இந்த விளம்பரங்கள் அதிகம் கை கொடுத்து உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

அந்த டீமுக்கு ஒரு சபாஷ்.


The Nun - Movie

Yes the demon in Nun costume looks scary. Even in one of the earlier movies when they show this painting it had good impact. But beyond that...