Search This Blog

Showing posts with label Anniyan. Show all posts
Showing posts with label Anniyan. Show all posts

Saturday, December 06, 2014

Kandhan Travelogue - Prologue

Kandhan was waiting patiently at Sholinganallur signal in his battered four wheeler. He was waiting for the signal to turn green. He tried to increase the air conditioning but only warm air was blowing out of the vent. He lowered the window only to be met with thick black fumes emanating from a water tanker in front of him. He immediately closed the window. He could see the chaos at the junction beyond the water tanker. He waited patiently.

Tuesday, October 26, 2010

செல்போன் ராணிகள்

தலைப்பு ராஜாக்களுக்கும் பொருந்தும் என்றாலும் ராணிகளுக்கு அதிகம் பொருந்தும்.

கந்தனின் பயணம் தொடர்கிறது. கந்தனின் முந்தைய பயணத்திற்கு இங்கே கிளிக்கவும்.

கந்தன் பைக்கை மரணக் கிணற்றுக்கு ஒப்பான சென்னை பழைய மஹாபலிபுர ரோட்டில் லாவகமாக செலுத்தினான். அவனை கொல்வதே நோக்கமாக பலர் அவனுக்கு பின்னேயும் முன்னேயும் வந்து கொண்டிருந்தனர். அனைவரிடமும் தப்பித்து முடிந்த வரை மற்றவர்களுக்கு இடையூறு இல்லாதவாறு பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் கந்தன்.

சென்னை நகர புத்திசாலி போலீஸ் வழி நெடுகிலும் குறுக்கும் நெடுக்குமாக பல இடையூறுகளை வைத்திருந்தார்கள். அது விபத்துக்களை தடுப்பதற்காக வைத்திருக்கிறார்களாம். அதில் அடிபட்டு சாகாமலிருப்பதே பெரிய விஷயம்.

திடிரென்று நடுரோட்டில் ஒரு பெண் மரண வேகத்தில் பின் வரும் வாகனங்களை கூட கவனிக்காமல் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தாள். ஆம்புலன்ஸை மிஞ்சும் வேகத்தில் வந்து கொண்டிருந்த பல்ஸர் பாண்டிகளும், இண்டிகா திண்டன்களும் அந்த பெண் நடு ரோட்டில் அப்படி சென்று கொண்டிருந்ததால் பசையில் ஒட்டிய ஈயை போல வண்டியின் வேகத்தை குறைத்து அவள் இப்படி செல்வாளோ அல்லது அப்படி செல்வாளோ என்று தெரியாமல் திண்டாடினர்.

கந்தனும் அந்த குழப்பத்தில் மாட்டினான். ஏன் எல்லா எம தூதன்களும் திடீரென்று திண்டாடுகிறார்கள் என்று பார்த்த பொழுது அலட்சியமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை கவனித்தான். உற்று நோக்கிய பொழுது தான் தெரிந்தது ராணியம்மா செல்போனில் மும்முரமாக பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தது.

கந்தனுக்குள் இருந்த அந்நியன் விழித்துக் கொண்டான். ஆனாலும் அந்நியம் செயல் படும் முன்பு கந்தன் பின் வரும் எமன்களின் தொந்தரவால் அவளை கடந்து சென்று விட்டான். கடந்த சில நிமிடங்களிலேயே மற்றொரு ராணி அவளின் கையும் காதில் போனை பிடித்துக் கொண்டிருந்தது.

ரோட்டில் நடந்து சென்ற அத்தனை பெண்களும் கையில் ஒரு உருப்படாத போனை வைத்துக் கொண்டு தலை வடக்கேயும் தெற்கேயும் ஆட்டியவாறு பேசிக் கொண்டிருந்தனர்.

துரைப்பாக்கம் நூறடி ரோட்டில் வண்டியை திருப்பிய கந்தன் ஓரமாக ஸ்டாண்டிட்டு நிறுத்தினான். சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்யும் அப்பனிகளும், அம்மணிகளும் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தனர். அனைத்து ராணிகளின் கைகளிலும் செல்போன்.

கந்தனின் பார்வை அந்த இருட்டிலும் பளிச்சென்று இருந்த அந்த வட நாட்டு ராணியின் மேல் விழுந்தது. அந்த இருட்டிலும் அவளின் நிறம் ஜொலித்தது. அவள் காதிலும் செல்போன்.

அப்படி என்ன தான் பேசுவார்கள்? கந்தனின் மனம் கள் குடித்த குரங்காய் ஆடிக் கொண்டிருந்தது. அந்த பெண் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற பிரக்னையே இல்லாமல் சுவாரஸ்யமாய் போனில் பேசிக் கொண்டு நடந்து வந்தாள் அவ்ளின் பின்னே லுங்கி அணிந்த ஒரு கஜா அவளின் பின்னழகை ரசித்துக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான்.

தன் பின்னே ஒரு கஜா வருவதை கூட கவனிக்காமல் அந்த ராணி நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது தான் கஜா ராணி வரும் வழியில் மாட்டு சாணம் இருப்பதை கவனித்தான். சில விநாடிக்குள் அந்த ராணி பேச்சின் சுவாரசியத்தில் சாணத்தை மிதித்தாள். ஆனால் மிதித்தது கூட தெரியாமல் பேசிக் கொண்டே சென்றாள்.

கந்தனின் அருகே அவள் வந்ததும் அவளின் முன்னே நின்றான் கந்தன். அப்பொழுது அவனை நிமிர்ந்து பார்க்காமல் போனில் பேசியவாறே அவனை சுற்றி செல்ல எத்தனித்தாள் ராணி. கந்தன் அவளின் காதில் போனை பிடித்திருந்த கையை பற்றி இழுத்தான்.

அப்பொழுது தான் சற்று தீவிரத்தை உணர்ந்த ராணி அவனை நிமிர்ந்து பார்த்தாள். பார்வையில் மிரட்சி. அவன் பிடியில் இருந்து தன் கையை விடுவிக்க முயன்றாள் ராணி. போனில் இருந்து ஒரு ஆணின் குரல் "ஹலோ ஹலோ" என்று கேட்டது.

"அப்படி என்ன தான் பேசிவீங்க" என்றான் கந்தன்.

"க்யா?" என்றாள் அந்த பெண். "லீவ் மீ" என்றாள்.

கந்தன் அவளின் கையில் இருந்த செல் போனை பிடித்து இழுத்தான். கந்தனை செல்போன் திருடன் என்று நினைத்தாள் ராணி.

இதையெல்லாம் கவனித்த லுங்கி சற்று பின்னே நின்றிருந்தது.

அவளின் கையில் இருந்து பறித்த போனை ஓங்கி தரையில் அடித்து உடைத்தான் கந்தன். "ஹே ஹே வாட் ஆர் யூ டூயிங்" என்று அந்த பெண் கதற "பர்ஸ்ட் வாட்ச் யுவர் ஸ்டெப்ஸ். கெட் யுவர் செல்ப் க்ளீன்ட்" என்று கூறி பின்னே நின்றிருந்த லுங்கியை கவனித்தான் கந்தன். அந்த பெண் அப்பொழுது தான் தன் காலில் இருந்த சாணத்தை கவனித்து "ஓ ஷிட்" என்று அலறினாள்.

லுங்கியின் கையிலும் ஒரு செல் போன் இருப்பதை அப்பொழுது தான் கவனித்தான் கந்தன். சாப்பிட உணவு இருக்கிறதோ இல்லையோ இப்பொழுதெல்லாம் எல்லார் கையிலும் செல் போன் இருக்கிறது. அதிலும் லுங்கி பார்ட்டி போனில் இருந்து காதுக்கு ஒரு இயர் போன் வேறு. நான்கே எட்டில் லுங்கியின் கையில் இருந்த செல் போனை பிடுங்கி தரையில் டமார் என்று உடைத்தான் கந்தன். லுங்கி சென்னை தமிழில் கந்தனை திட்டிக் கொண்டே கந்தனின் காலரை பிடிக்க லுங்கியின் கழுத்தில் ரப்பென்று அறைந்தான் கந்தன்.

கந்தனை சுற்றி கூட்டம் கூட ஆரம்பித்தது. "இனிமே ரோட்டிலே யாராவது போனில் பேசிக்கொண்டு பல்லை காட்டி கொண்டு நடந்தால் அவ்வளவு தான்"

இதை கேட்ட மற்ற ராணிகள் சட்டென்று "ஹே அப்பறம் கால் பண்ணறேன்" என்று போனை கட் செய்து பைக்குள் வைத்தார்கள்.

கந்தன் பைக்கை எடுத்துக் கொண்டு நங்கநல்லூர் வந்தான். ஒரு ஆபிஸ் பஸ் நின்று ஆட்களை இறக்கி விட்டு சென்றது. அந்த பஸ்ஸில் இருந்து இறங்கிய அந்த பெண் தன்னுடைய கைபைக்குள் கையை விட்டு வெளியே எடுத்தாள் செல்போனை. கந்தன் தன் பைக்கை ஸ்டாண்டிட்டு அவளை நோக்கி நடந்தான்.

Friday, November 09, 2007

இரயில் பயணம் - 4

இரயில் பயணம் 3 ஐ இங்கே படிக்கவும்.

டிடிஆரை சத்தம் போட்டுக்கூப்பிட்ட கந்தன் அவர் வந்தவுடன் எதனால் அவர் ரிசர்வ்ட் கோச்சில் அன்ரிசர்வ்ட் பயணிகளை அனுமதிக்கிறார் என்று கேட்டான்.

"இவ்வளவு பேர் இருக்கிறார்கள் ஆனால் இந்த இரயில் முழுவதற்கும் நான் ஒருவன் மட்டுமே பயணசீட்டு பரிசோதகர். எல்லோரையும் கந்த்ரோல் செய்வது நடக்காத காரியம்" என்றார்.

டிடிஆர், இரயில்வே நிர்வாகம், இரயில்வே அமைச்சர், இந்திய அரசாங்கம் என்று ஒருவரை ஒருவர் குறை கூறும் விளையாட்டு துவங்கிவிட்டதை உணர்ந்தான். இதற்கு ஒரே நிவாரணம் இந்தியாவையே இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டு புதிதாக துவங்குவது தான் சரியான பதில் என்பதை உணர்ந்தான் கந்தனுக்குள் இருந்த அந்நியன். இதை உணர்ந்த அந்நியன் கந்தனை விட்டு சிறிது காலம் விலகி இருந்தான்.

கந்தனின் இரயில் பயணம் இதோடு முற்றும்.

Saturday, October 27, 2007

இரயில் பயணம் - 3

இரயில் பயணம் - 2 இங்கே படிக்கவும்.

அடுத்தது கந்தனின் பார்வை அந்த பெண்ணிண் மீது விழுந்தது. பெண்கள் ஆண்களை விட பெண்கள் சிறிது சட்டத்தை மதிப்பவர்கள் என்ற எண்ணம் கந்தனுக்கு உண்டு. அவள் குழந்தைகளை இறுக்க பிடித்துக் கொண்டு நடக்கும் காரியங்களை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த கூட்டத்தில் ஒருவன் அவளது கணவனாக இருக்க வேண்டும் என்று கந்தன் உணர்ந்தான். இது வரை அவளது கணவணோ அல்லது அவனுடைய நண்பர்களோ அடி கொடுத்து தான் பார்த்திருப்பாள் முதல் முறையாக அவர்கள் அடி வாங்குவதை பார்த்த உடன் அவளுக்குள் முதல் முறையாக பயம் எட்டிப்பார்த்தது.

அவளை பார்த்து "உன் கணவண் யார்?" என்றான்.

அந்த குழந்தைகள் மலங்க மலங்க விழித்தது. இதே குழந்தைகழை வேறு இடத்தில் பார்த்திருந்தால் ஒரு வேளை ரசித்திருப்பான் கந்தன் இந்த சூழ்நிலையில் அவர்கள் மேலும் அவன் கோபம் பொங்கியது.

அவள் பயந்து கொண்டே ஒருவனை நோக்கி கை நீட்டினாள்.

"நீங்களாவது இவர்களுக்கு புத்தி சொல்ல கூடாதா. அன்ரிசர்வ்ட் டிக்கெட் இருந்தால் அன்ரிசர்வ்டடில் தானே செல்ல வேண்டும். அது என்ன ஒரு ஒரு ஸ்டேஷனிலும் இறங்குவது, பிறகு இரயில் கிளம்பிய உடன் ஓடி வந்து ஏறுவது. அதை கண்டிப்பதை விட்டு விட்டு ரசித்து கொண்டு இருக்கீங்க நீங்க. நீங்கள் கண்டிக்காததால் உங்கள் கணவர் பாவம் அதன் பலனை அநுபவிக்க போகிறார்" என்று பேசி முடிக்கும் முன்பு மூங்கிலை அந்த கணவணின் முதுகில் இறக்கினான்.

"ஹக் ஹம்மா" என்று அவன் முதுகை தடவும் முன்பாக அடுத்த அடி சாட்டையை போல அவன் தோளில் இறங்கியது.

அடுத்து கையில் பொறி பொட்டலத்தோடு நின்றவனை பார்த்தான். தரை முழுதும் பொறி சிந்தியிருந்தது. போதாக்குறைக்கு ஆரஞ்சு பழ தோல் வேறு.

அவனின் தலை முடியை கொத்தாக பிடித்தான் தரயை நோக்கி குனிய வைத்தான் கந்தன்.

"கீழே என்ன திரியுது" என்றான்

"அது.."

பளார் என்று விழுந்தது அறை அவன் எதிர்ப்பார்க்காத தருனத்தில்.

"இந்த கோச் முழுவதையும் ஒரு குப்பை இல்லாமல் சுத்தம் செய். சுத்தம் சோறு போடும்" என்று தள்ளி விட்டான்.

அவன் முனகிக்கொண்டே உதவாத நண்பர்களை பார்த்துக்கொண்டே சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

டிடிஆர் வேகமாக கந்தனை நோக்கி வர ஆரம்பித்தார்.

தொடரும்..

Thursday, October 25, 2007

இரயில் பயணம் - 2

இரயில் பயணம் - 1 இங்கே படிக்கவும்.

கந்தனுக்கு அடுத்தவர்களை குறித்து சிறிதும் கவலைப்படாமல், அன்ரிசர்வ்ட் டிக்கெட் வைத்துக்கொண்டு ரிசர்வ்ட் கோச்சில் பயணம் செய்யும் அந்த கூட்டத்தின் மீது கடும் கோபம் ஏற்ப்பட்டது.

செங்கல்பட்டு வந்தது. அந்த கூட்டத்தில் இருந்த சிலர் கீழே இறங்கி சன்னல் வழியாக உள்ளே இருப்பவர்களோடு சத்தம் போட்டு பேசி சிரிக்க ஆரம்பித்தனர். வண்டி கிளம்பியது. எல்லோரும் ஓடி வந்து ஏறினாகள். இது வரை வசதியாக உட்கார்ந்த ரிசர்வ்ட் டிக்கெட் வைத்திருந்தவரை ஒரம் தள்ளி மறுபடியும் கச்சேரியை ஆரம்பித்தது கூட்டம்.

கந்தன் எழுந்தான்.

"ஸார் நீங்கள் வைத்திருப்பது அன்ரிசர்வ்ட் டிக்கெட் அதை வைத்துக்கொண்டு இதில் பயணம் செய்வது தவறு, மேலும் ஒரு சரியான டிக்கெட் வைத்திருப்பவரையும் நீங்கள் சங்கடப்படுத்துகிறீர்கள்" என்றான்

அந்த அப்பாவி மனிதர் "பரவால்லே ஸார் விடுங்க" என்றார்

"அதான் அவரே சொல்றார் இல்லே போய் உன் வேலையை பார்" என்றான் அந்த கூட்டத்திலேயே சிறியவன்.

அந்த கூட்டத்தில் இருந்த பெண் அவனை பெருமையோடு பார்ததாள்.

"நான் டிக்கெட் பரிசோதகரை கூப்பிடுகிறேன்" என்று நகர்ந்தான் கந்தன்

"யோவ் அதான் சொல்றாங்க இல்லே போய் உக்கார்யா. வந்துட்டான் பெரிசா" என்றான் கூட்டத்தில் இன்னொருவன்.

"தம்பி நீங்க எல்லாம் தவறு செய்றீங்க அது உங்களுக்கு புரியுதா" என்றான் கந்தன்.

"தோடா வந்துட்டார் சதர்ன் இரயில்வே ஓனர் போய் ஒர்மாய் உட்கார்"

சுற்றியிருந்த மக்கள் பதட்டமாயினர். கந்தன் மீது எரிச்சலுற்றனர். "துஷ்டனை கண்டால் தூர விலகாமல் என்ன இவன் பிரச்சனை பண்ணிக்கொண்டு இருக்கிறான். அடிபட்டு சாக போகிறான்" என்று நினைத்தனர்.

கந்தன் அவர்களிடம் "நான் இப்பொ பத்து வரை எண்ணுவேண் அதற்குள் நீங்கள் இது வரை செய்த தவறுகளை ஒன்று ஒன்றாக சொல்லவேண்டும். ஓன்று" என்றான் கந்தன்.

"அடிங்....... பெரிய ...... இவர். பாபா கவுண்ட்டிங் தறார். போடா" மூவர் சீட்டை விட்டு எழுந்து தலை முடியை சிலுப்பிக் கொண்டனர்.

அவன் பேசி முடிக்கவும் கந்தன் பத்து எண்ணி முடிக்கவும் சரியாக இருந்தது.

"சொல்லிட்டே இருக்கேன் எண்ணிட்டே இருக்கே" என்று ஒருவன் கை ஓங்கினான்

சுளீர் என்று விழுந்தது அவன் கழுத்தில் ஒரு அடி. துடித்துப் போனான் அவன். கையால் கழுத்தை பிடித்துக்கொண்டான்.

கந்தன் கையில் ஒரு நீள மூங்கில். எப்பொழுது, எங்கிருந்து வந்தது என்று அவர்களுக்கு தெரியவில்லை.

"முதல் தவறு அடுத்தவங்களை மதித்து பேசு" அடுத்த சுளீர் அருகே இருந்த இன்னொருவனுக்கு.

"ஹம்மா" என்று கையை பிடித்துக்கொண்டான் அவன்.

இன்னொருவன் மூங்கிலை பிடித்து ஒடிக்க வந்தான் கந்தனின் கால் அவன் வயிற்றில் இறங்கியது. தொபீர் என்று அனைவர் மீதும் விழுந்தான் அவன்.

தொடரும் ....

Wednesday, October 24, 2007

இரயில் பயணம்

இதை ஒரு தொடர் பதிவாக போட ஆசை. இந்த பதிவில் வரும் காரியங்கள் எல்லாம் எனக்குள் இருக்கும் அந்நியனின் விருப்பம்.

கந்தன் வைகையில் ஏறினான். அவனுக்கு இது முதல் முறை. வைகையய் பார்த்திருக்கிறான் ஆனால் அதில் ஏறி போவது இது தான் முதல் முறை. ஏறிய உடனேயே வைகை எக்ஸ்பிரஸ் மீது வைத்து இருந்த மதிப்பு குறைந்தது. வைகையின் கோச் நீள வாக்கில் இரண்டாக பிரிக்க பட்டிருந்தது ஒரு ஒரு புறமும் மூன்று பேர் அமர்வது போல இருக்கை எண் போட பட்டிருந்தது. அதில் இருவர் மட்டுமே சவுகரியமாக உட்கார முடியும். பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்தான் கந்தன்.

அந்த பக்கம் இருந்த வரிசையை கவனித்தான் எழு பேர் கூட்டமாக எறினார்கள். அதில் ஒருவர் பெண் அவர் கையில் இரு குழந்தைகள். ஆண்கள் அனைவரும் 25 வயதுக்குள் இருந்தார்கள். எல்லோரும் பாப் கட்டை போல் தலை முடியை வைத்து இருந்தார்கள். பார்த்த உடனேயே தெறிந்தது இது ஒரு கலாட்டா கூட்டம். அதை நிரூபிப்பது போல் அந்த கூட்டம் மச்சான், டேய் என்று இஷ்டத்துக்கு சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருந்தது. அவர்களின் கூச்சல் கந்தனின் காதுக்கு நாராசமாயிருந்தது. அந்த கூட்டத்தினர் ஒரு புறம் நால்வரும் மறு புறம் மூவரூமாக அமர்ந்தனர். ஒருவர் ஈறங்கிவிடுவார் போல என்று கந்தன் நினைத்துக்கொண்டான்.

வைகை கிளம்பியது. மதிய நேரம் வெயில் வேலையை காட்ட ஆரம்பித்தது.

அந்த கூட்டத்தை கவனித்த கந்தன் அவர்கள் வரிசையில் ஒரு புறம் நால்வரும் எதிர் திசையில் நால்வரும் அமர்ந்திருப்பதை கவனித்தான். அப்பொழுது தான் ஒன்றை அவன் கவனித்தான். அந்த ஏழு பேரில் இருவர் அன்ரிசர்வ்ட் டிக்கெட் வைத்துக்கொண்டு ரிசர்வ்ட் கோச்சில் வந்து கொண்டிருப்பது. இதனால் பாதிக்கபட்டிருப்பது ஒழுங்காக பதிவு செய்த மற்றொருவர். அவரயும் னெருக்கி உட்கார செய்தது அந்த கூட்டம். அவரும் ஒன்றும் கூறாமல் இடுக்கி கஷ்டப்பட்டு உட்கார்ந்து வந்தார்.

ட்க்கெட் பரிசோதிப்பவர் வரும் வேளையில் அந்த கூட்டத்தில் இருவர் காணாமல் போயினர். பரிசோதகர் சென்றதும் இருவரும் மறுபடியும் வந்து அமர்ந்தனர். அந்த இரு குழ்ந்தைகளையிம் அந்த ஆறு பேரும் போட்டி போட்டுக்கொண்டு கொஞ்சினர். அந்த கூட்டத்தோடு வந்து இருந்த பெண் கூட இருந்த ஆண்களின் தைரியத்தில் சத்தம் போட்டு பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் வந்தாள். சிறிது நேர்த்தில் பல திண்பண்டங்களை பிரித்து உண்ண ஆரம்பித்தது கூட்டம். உண்ணும் பொழுது கீழே சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பது கூட தெரியாமல் உண்ண ஆரம்பித்தது அந்த கூட்டம்.

அவர்களுடைய உடையும், நடையுமே காண்பித்தது அவர்கள் எவரை குறித்தும் கவலை படுபவர்கள் இல்லை என்று. இதை பார்த்துக்கொண்டு இருந்த கந்தனுக்குள் இருந்த அந்நியன் விழித்துக்கொண்டான்

தொடரும்..

The Nun - Movie

Yes the demon in Nun costume looks scary. Even in one of the earlier movies when they show this painting it had good impact. But beyond that...