Search This Blog

Monday, May 21, 2007

சென்னையில் வெயில்க்காலம்

ஒவ்வொரு நாள் மாலையும் என்னவோ மழை வெளுத்து கட்ட போவது போ இருட்டிக்கொண்டு வருகிறது. ஆனால் நமத்து போன பட்டாசை போல பிசுபிசுத்து போய்விடுகிறது. இதே வேகத்தோடு வெயில் தொடர்ந்து அடிக்குமானால் சென்னை சகாராவாக மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


ஆனால் சில நகரங்களில் எப்பொழுதும் இருக்கும் மேக மூட்டமான சோம்பேறித்தனமான சூழ்நிலையோடு ஒப்பிட்டு பார்க்கையில் இந்த வெயில் தேவலாம் என்றே படுகிறது. லண்டனில் ஒரு டாக்ஸி ஒட்டுனர் சொன்னது நினைவுக்கு வருகிறது "எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிக்கொள்ளலாம் ஆனால் வெயிலே இல்லாத ஊரில் இருப்பது மிக கடினம்"

எந்த ஒரு அம்பாஸடர் காரின் பின் சென்றாலும் அந்த கார் வேகம் எடுக்கும் சமயத்தில் குப்பென்று ஒரு கரிமயமான புகயை ந்ம் முகத்தில் தூவி விட்டு செல்கிறது.

டாடா சுமோக்களும், டோயொடா குவாலிஸ்களும் ரோடில் நடமாடும் எமன்கள்

No comments:

Coolie - My View

I go to every Rajini movie expecting something which we became a fan of in 80's and 90's. But I only end up saying may be in the nex...