Search This Blog

Wednesday, January 30, 2008

தமிழ்

தமிழில் எழுதி நெடு நாட்கள் ஆகிவிட்டது. தமிழில் என்பதை விட எழுதியே நெடு நாட்கள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் என் இணையதளத்துக்கு வருவோரின் எண்ணிக்கை 10 ல் இருந்து 0, 1 என்று குறைந்து விட்டது.

மிக முக்கியமாக ரஜினியின் இரண்டு படங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ரோபோ மற்றும் குசேலன். இரண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

**

நம் ஊரில் தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. கீழ்த்தட்டு, மேல்தட்டு என்றில்லாமல் அனவரையும் இந்த வியாதி பிடித்துக்க்கொள்கிறது.

ஒரு டீக்கடைக்கு நண்பர்களை கூட்டி செல்ல வேண்டியது, அந்த டீக்கடைக்காரரிடம் அதிக பரிச்சியம் காட்டி நண்பர்களிடம் இதெல்லாம் சர்வ சாதரணம் என்ற ஒரு லுக்கை விட வேண்டியது.

ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலுக்கு கூட்டி செல்ல வேண்டியது, யாரிடமும் விசாரிக்காமல் டாய்லெட்டில் இருந்து பார் வரை கூட்டி சென்று இந்த ஓட்டல் எல்லாம் எனக்கு அத்து படி என்று ஒரு லுக்.

காய்கறிக்காரரிடம் அல்லது பழக்கடைக்காரரிடம் ஒரு கூடுதல் பழம் அல்லது இரண்டு கூடுதல் வெண்டைக்காய் எடுத்துக்கொண்டு உரிமை பாரட்டுவது.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் கை வலிக்கிறது.

**

பீமா கதை முடிந்து விட்டது. இந்த படத்தை வானத்திற்கு உயர்த்திய பெருமை sify யையே சாரும். ஆனால் டிரைலரை பார்த்தே படம் ஹோப்லெஸ் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. விக்ரம் ஹீரோயிஸத்தை மூட்டை கட்டிவிட்டு உருப்படியாக ஏதாவது செய்யலாம்.

**

சென்னை பழைய மஹாபலிபுரம் சாலையில் ஐந்து வருடங்களாக சாலை வேலை நடைபெற்று வருகிறது. சாலை முழுவதும் ஜல்லி கற்களை பரப்பி விட்டுள்ளனர் வேலை முடிந்த சாலை பாகங்களிலும் இதுவே நிலமை. இதில் வண்டி ஓட்டுவது கோலிகுண்டிண் மீது வண்டி ஓட்டுவது போல் ஆகும்.

All these guys should be screwed with a Pineapple or Jackfruit.

3 comments:

Anonymous said...

Nice to see your article in Tamil!! Innum nerya ezuthi kondae errungal:-) Awaiting thriller stories from you..

Balaji S Rajan said...

Dan,

I laughed over your narration about the road condition. Oh.. I can imagine. Yes... should be a nightmare for the users.

Your Beem's comments were real. Even I felt so. Let us see.

People are the same. I see such characters in the Tele Serials (Tamil).

Keep writing especially about chennai.

Dany said...

நன்றி நித்யா மற்றும் பாலாஜி.

நீங்கள் சொல்வதை போல எழுத முயற்சி செய்கிறேன்

A Simple Plan and Just Mercy