சற்று முன்பு வாழை படம் பார்த்து முடித்தேன். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அறிவேன் ஆனால் கதை என்ன என்று தெரியாமல் தான் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு துயரமான சம்பவத்தை தழுவி இது எடுக்கப்பட்டுள்ளது என்பதை படம் பார்த்த பிறகே அறிந்துகொண்டேன்.
ஒரு சம்பவத்தை தழுவி எடுக்கப்படும் படங்கள் நம் ஊரில் சற்று குறைவு தான் ஹாலிவுட்டுடன் ஒப்பிடும்பொழுது. அங்கே தான் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை தழுவி படம் எடுக்கும் பழக்கம் அதிகம்.
"The Sweet Hereafter" என்று ஒரு படம் நினைவுக்கு வருகிறது அதுவும் இந்த படத்தை போன்றதொரு துயர சம்பவத்தை அடிப்படையாக கொண்டது அனால் அதன் நோக்கம் வேறுபட்டது.
சம்பவங்களை தழுவி படம் எடுப்பது தவறில்லை சில நேரம் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களை குறித்து எடுப்பார்கள் சில நேரம் துயர சம்பவங்களை தழுவி எடுப்பார்கள் கல்லூரி படத்தை போன்று.வாழையும் அப்படிப்பட்டதே.
ஏதோ ஒரு காரணத்தால் என்னால் படத்தில் முழுமையாக ஒன்ற முடியவில்லை. நெல்லை தமிழ் அழகாக இருந்தது. ஆனால் படத்தில் அந்த கடைசி சம்பவத்தை எடுத்து விட்டால் வேறு ஒன்றும் இல்லை காமிரா ஆங்கிள் மேக்கிங் என்று அனைத்தும் அருமை ஆனால் பல இடங்களை வேகமாக ஓட்டியே பார்த்துவிடலாம்.
No comments:
Post a Comment