மழை

கோவிந்தன் வாணத்தை அண்ணாந்து பார்த்தான் மழைக்கான அறிகுறி இல்லை. தன் வலது பக்கத்தில் இருந்த வயலை பார்த்தான் அடித்த வெயிலில் நாற்றுகள் வாடி இருந்தன. கவலை ரேகை கோவிந்தன் முகத்தில் பரவியது.

இரவு கயிற்று கட்டிலில் மனைவி கொடுத்த பழைய சாதத்தை சாப்பிட்டுவிட்டு வானம் பார்த்து படுத்து இருந்தான். பயிற்களின் நினைவு அவனை வாட்டியது. எப்பொழுது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது. சிலீரென்று முகத்தில் ஏதோ பட்டது விருட்டென்று எழுந்தான். வானத்தில் நிலா இல்லை, நட்ச்சத்திரம் இல்லை மழை தூர ஆரம்பித்து இருந்தது.

தூக்கம் கலைந்த சோகம் முற்றிலும் அவன் முகத்தில் இல்லை. அந்த இருட்டிலும் அவன் பற்கள் பளீரென்று அவன் மனைவிக்கு அவன் சிரிப்பினில் தெரிந்தன.

Comments

Anonymous said…
:-)
Balaji S Rajan said…
Kalkiteenga Ponga... That was a good one.
niveditha said…
superb!!! Ramesh tamil layum kalakka aarambithuvitaar...!
Dan said…
thanks anon, balaji, niveditha

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point