Search This Blog

Tuesday, May 15, 2007

சண்டை

சிறு வயதில் நான் அதிகமாக தமிழ் நாவல்களை படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ராஜேஷ் குமார், சுபா, பி கே பி இவர்கள் மூவரின் நாவல்களும் அல்வா மாதிரி வெளுத்து கட்டுவேன். இப்பொழுது சில நாவல்களை படித்து வருகிரேன் அவைகள் மிகவும் சாதரணமாக இருப்பதை உணர்கிறேன். ஓன்று அவர்களுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது அல்லது எனக்கு ரசனை மாறிவிட்டது.

இந்தியாவில் சுத்தமாக உயிர்களுக்கு மதிப்பு இல்லை என்பதை சென்னையின் தெருக்களில் பைக்கில் பயணம் செய்தால் தெரிந்துகொள்ளலாம். எல்லாருக்கும் அவசரம். அடுத்தவருகு வழி விட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லை. எங்கே பார்த்தாலும் ஒழுங்கீனம். விதிமுறைகளை பின்பற்றுவதில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் நான் மட்டும் சிக்னலில் நின்றால் என் உயிர் என்னிடம் இருக்காது.

நான் வசிக்கும் வீடு இரயில் தண்டவாளங்களின் அருகே உள்ளது. தண்டவாளத்திண் மறுபுறமும் வீடுகள் உண்டு. இன்று நான் வீட்டை விட்டு கிளம்பும் பொழுது தண்டவாளத்திண் மறுபுறம் ஒரு குடும்ப சண்டை. இரண்டு பெண்கள் நைட்டி உடையில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அடிப்பதை தடுத்து கொண்டு இருந்தார்கள். இப்படி தெரு சண்டையை பார்த்தாலே வாந்தி தொண்டை வரை வரும் எனக்கு.

No comments:

Beautiful Boy