தினகரன்

சன் தொலைக்காட்சியின் வியாபார நுணுக்கங்களை பார்க்கும் பொழுது வியப்பு நிச்சயம் வருகிறது. வியாபாரத்தில் எங்கேயோ இருந்த குங்குமம் இதழை மிகவும் பாடுபட்டு ஒரு முன்னனி இதழ் வரிசையில் கொண்டு வந்து விட்டனர். எல்லாம் மிகவும் சுலபமாக செய்து விட்டார்கள். ஒன்றுமில்லை திரும்ப திரும்ப குங்குமம் மட்டுமே முன்னனி என்று கூறி அதை ஒரு அளவுக்கு நிரைவேற்றியும் காட்டிவிட்டார்கள்.

அவர்களது அடுத்த முயற்சி தான் தினகரனை முன்னே கொண்டு வரவேண்டும் என்ற முயற்சி ஆனால் அது எங்கே சென்று முடிந்தது என்று எல்லோரும் அறிவர்.

நான் பேச வேண்டும் என்று வந்த காரியமே வேறு. நம் ஊரில் "porn" எந்த உருவிலும் தடை செய்ய பட்டு உள்ளது. ஆனால் எந்த ஒரு புத்தகத்தையோ அல்லது நாளிதழையோ எடுத்தால் அதில் 50% "porn" porn இல்லாதது போல ஆக்ரமித்துள்ளது.

நேற்றைய தினகரனில் தலைப்பு செய்தியாக வந்தது "நர்சுக்கு M L A முத்தம். கிளு கிளு படங்கள்". நடிகைகள் அரைகுரை உடையில் காட்சி தராத பத்திரிக்கையே இல்லை எனலாம். விகடன், குமுதம் எதுவும் விதிவிலக்கல்ல.

என்னடா நீ என்ன பெரிய உத்தமனா என்று நீங்கள் கேட்பீர்கள். நான் சுட்டிக்காட்ட விரும்புவது இந்தியாவில் இருக்கும் முரண்பாடுகளை தான்.

ஒரு பக்கம் பத்தினி வேஷம் மற்றொரு பக்கம் இன்னொரு வேஷம். என்ன கொடுமை சரவணண் இது?

Comments

Balaji S Rajan said…
Well said! This has been there for long time. Talk something, do something. Hmmmmmmm... yeppo thaan vidiyumo !

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point