Search This Blog

Friday, October 12, 2007

கூல்

"Cool" திரையில் ரஜினி பேசிக்கொண்டு இருந்தார்.

அச்சுதனின் முழுக்கவனமும் ரஜினியின் மீதே இருந்தது. அவன் அருகே அவன் மனைவி சந்தியா. மனைவியை மூன்றாவது முறையாக சிவாஜி படத்திற்கு கூட்டிவந்திருந்தான் அச்சுதன். அவனுக்கு இது ஆறாவது முறை.

Interval வந்தது ரஜினி சிங்கத்தின் உறுமலோடு திரையில் இருந்தார்.

வெளியே வந்து மனைவிக்கு பாப்கார்ன் மற்றும் பெப்சி வாங்கி கொண்டு வந்தான். வரும் வழியில் இறுக்கமான T-Shirtல் வந்திருந்த இரண்டு இளம் பெண்களை ரசித்தான்.

இருக்கையில் அமர்ந்தவுடன் அடுத்த நாள் பற்றின கவலை மனதில் தொற்றியது. வெள்ளிக்கிழமை ஆபிஸை விட்டு கிளம்பும் போது முடிக்காமல் வந்த வேலை பூதாகரமாக திரையில் ஆடியது. வெளியே பார்த்த அதே பெண்கள் மறுபடியும் கண்ணில் பட்டார்கள். ஆபீஸ் வேலை மறந்தது. திரையில் ரஜினி தோன்றி கல்யான கோஷ்டி பற்றி பேச ஆரம்பித்தார். அச்சுதன் அனைத்து கவலயையும் மறந்து படம் பார்த்தான்.

Money Card மூலம் இந்தியாவின் அனைத்து பிரச்சனையையும் தீர்க்க முடியும் என்று சங்கர் கூற படம் முடிந்தது. ஆபிஸ் பற்றிய நினைவு மனதில் ஆயிரம் டன் கப்பலை போல் வந்து உட்கார்ந்தது. வெளியே வந்தவுடன் அனல் முகத்தில் அறைந்தது. இருக்கமான முகத்தோடு பைக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அச்சுதன். அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடினாள் சந்தியா.

வெளியே கவுண்டரில் அடுத்த ஷோவிற்கு கூட்டம். அவர்களை பார்க்கும் போது எரிச்சல் பீறிட்டது அச்சுதனிற்கு. பைக்கை உதைத்து கிளப்பினன். மனதில் ரஜினி காணாமல் போயிருந்தார். எதிரே ரஜினி போஸ்டரில் சிரித்தார்.

No comments:

Coolie - My View

I go to every Rajini movie expecting something which we became a fan of in 80's and 90's. But I only end up saying may be in the nex...