Search This Blog

Wednesday, October 24, 2007

இரயில் பயணம்

இதை ஒரு தொடர் பதிவாக போட ஆசை. இந்த பதிவில் வரும் காரியங்கள் எல்லாம் எனக்குள் இருக்கும் அந்நியனின் விருப்பம்.

கந்தன் வைகையில் ஏறினான். அவனுக்கு இது முதல் முறை. வைகையய் பார்த்திருக்கிறான் ஆனால் அதில் ஏறி போவது இது தான் முதல் முறை. ஏறிய உடனேயே வைகை எக்ஸ்பிரஸ் மீது வைத்து இருந்த மதிப்பு குறைந்தது. வைகையின் கோச் நீள வாக்கில் இரண்டாக பிரிக்க பட்டிருந்தது ஒரு ஒரு புறமும் மூன்று பேர் அமர்வது போல இருக்கை எண் போட பட்டிருந்தது. அதில் இருவர் மட்டுமே சவுகரியமாக உட்கார முடியும். பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்தான் கந்தன்.

அந்த பக்கம் இருந்த வரிசையை கவனித்தான் எழு பேர் கூட்டமாக எறினார்கள். அதில் ஒருவர் பெண் அவர் கையில் இரு குழந்தைகள். ஆண்கள் அனைவரும் 25 வயதுக்குள் இருந்தார்கள். எல்லோரும் பாப் கட்டை போல் தலை முடியை வைத்து இருந்தார்கள். பார்த்த உடனேயே தெறிந்தது இது ஒரு கலாட்டா கூட்டம். அதை நிரூபிப்பது போல் அந்த கூட்டம் மச்சான், டேய் என்று இஷ்டத்துக்கு சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருந்தது. அவர்களின் கூச்சல் கந்தனின் காதுக்கு நாராசமாயிருந்தது. அந்த கூட்டத்தினர் ஒரு புறம் நால்வரும் மறு புறம் மூவரூமாக அமர்ந்தனர். ஒருவர் ஈறங்கிவிடுவார் போல என்று கந்தன் நினைத்துக்கொண்டான்.

வைகை கிளம்பியது. மதிய நேரம் வெயில் வேலையை காட்ட ஆரம்பித்தது.

அந்த கூட்டத்தை கவனித்த கந்தன் அவர்கள் வரிசையில் ஒரு புறம் நால்வரும் எதிர் திசையில் நால்வரும் அமர்ந்திருப்பதை கவனித்தான். அப்பொழுது தான் ஒன்றை அவன் கவனித்தான். அந்த ஏழு பேரில் இருவர் அன்ரிசர்வ்ட் டிக்கெட் வைத்துக்கொண்டு ரிசர்வ்ட் கோச்சில் வந்து கொண்டிருப்பது. இதனால் பாதிக்கபட்டிருப்பது ஒழுங்காக பதிவு செய்த மற்றொருவர். அவரயும் னெருக்கி உட்கார செய்தது அந்த கூட்டம். அவரும் ஒன்றும் கூறாமல் இடுக்கி கஷ்டப்பட்டு உட்கார்ந்து வந்தார்.

ட்க்கெட் பரிசோதிப்பவர் வரும் வேளையில் அந்த கூட்டத்தில் இருவர் காணாமல் போயினர். பரிசோதகர் சென்றதும் இருவரும் மறுபடியும் வந்து அமர்ந்தனர். அந்த இரு குழ்ந்தைகளையிம் அந்த ஆறு பேரும் போட்டி போட்டுக்கொண்டு கொஞ்சினர். அந்த கூட்டத்தோடு வந்து இருந்த பெண் கூட இருந்த ஆண்களின் தைரியத்தில் சத்தம் போட்டு பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் வந்தாள். சிறிது நேர்த்தில் பல திண்பண்டங்களை பிரித்து உண்ண ஆரம்பித்தது கூட்டம். உண்ணும் பொழுது கீழே சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பது கூட தெரியாமல் உண்ண ஆரம்பித்தது அந்த கூட்டம்.

அவர்களுடைய உடையும், நடையுமே காண்பித்தது அவர்கள் எவரை குறித்தும் கவலை படுபவர்கள் இல்லை என்று. இதை பார்த்துக்கொண்டு இருந்த கந்தனுக்குள் இருந்த அந்நியன் விழித்துக்கொண்டான்

தொடரும்..

1 comment:

Balaji S Rajan said...

Good start! Well done!

The Nun - Movie

Yes the demon in Nun costume looks scary. Even in one of the earlier movies when they show this painting it had good impact. But beyond that...