கடந்த வாரம் பொல்லாதவன் திரைப்படம் பார்த்தேன். இந்த படத்தை குறித்து எல்லா தளங்களிலும் பெரிதாக பேசப்பட்டதாலும் தொலைக்காட்சியில் காண்பித்த சில காட்சிகள் சுவாரசியமாய் இருந்ததாலும் இப்படத்தை தேர்வு செய்தேன்.
படத்தில் ஒரு சதவீதம் கூட பிரமாண்டம் இல்லை. ஹீரோ சும்மா நடந்து வரும் காட்சியிலும் பிரமாண்டத்தை உபயோகப்படுத்தும் தமிழ் திரைத்துரையில் இவ்வாறு படங்கள் வருவது குறைவு. சில படங்கள் புரிவதற்கு கடினமான விஷயத்தை எடுத்து தோற்று போவது உண்டு ஆனால் இப்படத்தில் அனைவரும் தன்னோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளும்படியான விஷயத்தை எடுத்திருப்பதினால் அனைவரையும் இப்படம் கவர்கிறது என்று நினைக்கிறேன்.
சாதரண தனுஷ் வீட்டில் திட்டு வாங்கி, சண்டை போட்டு ஒரு பைக் வாங்குகிறார். அவர்க்கு அந்த பைக்கின் மீது மிகுந்த காதல். பைக் வந்த பிறகு அவருக்கு எல்லா இடத்திலும் நன்மை நடக்கிறது. அதே ஊரில் ஒரு பெரிய ரவுடி கூட்டத்தையும் காட்டுகின்றனர். இந்த காட்சிகளில் வன்முறை ஏராளம். பல வசனங்கள் சென்சாரில் கத்தரிக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகளை பார்க்கும் போது நாம் இருக்கும் சென்னையில் இப்படி ஆட்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கவே பயமாக உள்ளது.
அந்த கூட்டம் தனுஷின் பைக்கை திருடுகிறது. அந்த பைக்கை தேடி செல்லும் தனுஷிற்கு ஏற்படும் அனுபவங்களே இந்த படம். தன் அப்பாவை அடித்த வில்லனை தனுஷ் புரட்டி எடுக்கும் சண்டை அருமை.
அண்ணனையே கொடூரமாக கொல்லும் தம்பி பார்க்க முடியவில்லை. ந்டிகை அஞ்சு ஒரு புது பரிமாணத்தை காட்டுகிறார். இதில் வரும் வில்லன் ஒவ்வொருவரையும் நாமே நாலு அறை போட வேண்டும் போல கை துடிக்க வைக்கும் படம்.
நகைச்சுவை சில நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் நன்றாகவே வந்துள்ளது.
அஹா ஒஹோ என்று இல்லாவிட்டாலும் நம் உணர்வுகளை தொடும் ஒரு படம்.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
Ikiru
Just finished watching this movie and what a profound movie. This is my first Akira Kurosawa movie and I was simply blown away by the movie...
-
The title of this blog is a famous title of Rajesh Kumar's tamil novel. Those who are familiar with tamil novels must have heard of Raje...
-
நான் பொருட்காட்சிக்கு சென்று 15 வருடங்களாவது இருக்கும். பொருட்காட்சியை பற்றி மனதில் பசுமையான நினைவுகளே உள்ளன. குறிப்பாக இந்தியன் இரயில்வே ஸ்...
-
In our country everyone wants to come last and go first. You can see this anywhere you go. Few common places where you can see such thing ar...
3 comments:
hiya..actually am not a great fan of Dhanush..somehow am not able to accept him as a hero!!!.I always find his movies to be quite mediocre.
dont look at him as a hero and he isnt doing any hero stuff in this movie he just acts as a normal man throughout this movie and it fits him
Dan,
A decent review. I think I should see this.
Post a Comment