விஜய் லின்க்

குமுதம், sify மற்றும் ஆனந்த விகடனில் அழகிய தமிழ் மகன் விமர்சனம் படித்தேன். எல்லோருமே ஆஹா ஓஹோ என்று போட்டு உள்ளார்கள்.

இதே படத்தில் ரஜினி நடித்திருந்தால் இந்நேரம் இந்த படத்தை கிழி கிழி என்று கிழித்து இருப்பார்கள் இந்த மீடியா.

அது மட்டும் இல்லாமல் இந்த மூன்று மீடியாக்களும் எந்நேரமும் விஜய் புராணம் பாடிக்கொண்டிருப்பதன் நோக்கமும் புரியவில்லை.

ATM பட ஆரம்பம் முதல் அதற்கு கொடுக்கப்பட்ட build up சொல்லில் அடங்காது. சிவாஜியை மிஞ்சி விடும் என்று கூறி ரஜினியை அதிலும் மட்டப்படுத்தவே பார்த்தன இந்த மீடியா. உண்மையில் என்ன ஆனது என்பது வேறு விஷயம்.

இவ்வாறு புகழப்படும் விஜய், விஜய் டிவியின் மூலமாக வேறு பல விளம்பரங்களை தேடிக்கொள்கிறார்.

இந்த பதிவு விஜயின் ரசிகர்களை புண்படுத்தலாம், ஆனால் பதிவின் நோக்கம் அது அல்ல. சுய புராணம் யார் பாடினாலும் ஒரு அளவுக்கு மே மக்களுக்கு வெறுப்பு தான் மிஞ்சும். ஆனால் உண்மையை சுட்டிக்காட்ட வேண்டிய மீடியாவே இப்படி இருக்கும் போது விஜயின் புகழ் அவ்வளவு சீக்கிரத்தில் மங்காது.

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point