மிக்ஸர்

சில நாட்களுக்கு முன்பு எனக்கு வங்கியில் ஏற்பட்ட ஒரு அநுபவத்தை குறித்து எழுதியிருந்தேன் Treatment . இந்த அநுபவத்திற்கு பிறகு நான் கனரா வங்கியில் ஒரு டிரான்ஸ்பர் விண்ண்ப்பம் கொடுத்தேன். அதை நிராகரித்ததாக சொல்லி எனக்கு போன் செய்தார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம் பத்து வருடத்திற்கு முன் நான் கொடுத்திருந்த புகைப்படமும் இப்பொழுது உள்ள புகைப்படமும் ஒத்து போகவில்லையாம்.

அவர்கள் செய்திருக்க வேண்டியது என்னிடம் ஒரு போன் செய்து விளக்கம் கேட்டிருக்கலாம் அதை விட்டு விட்டு நேராக நிராகரித்தது என்னுள் கோபத்தை உண்டு பண்ணியது. இனி கனரா வங்கி இருக்கு திசையிலேயே படுக்க கூடாது என்று அக்கவுந்தை மூடி விடலாம் என்ரு சென்றேன்.

மூடுவதற்கும் அவர்கள் ஆயிரம் காரணங்கள் சொல்லி தள்ளி போடலாம் என்ற பயத்துடனே சென்றேன். எடுத்தவுடனே எரிச்சலோடு தான் பேச்சை ஆரம்பித்தனர். பிறகு நான் வேலை செய்யும் கம்பெனியின் பெயரை கேட்டனர் அதன் பிறகு தான் மரியாதை வந்தது. அதை பார்த்த எனக்கு வருத்தமாக தான் இருந்தது.

மனிதனாகிய எனக்கு மதிப்பு இல்லை நான் செய்யும் வேலையினால் எனக்கு மரியாதை. இப்படி தான் உள்ளது இந்த உலகம்.

Comments

cowey said…
enna kodumai Saravana

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point