Search This Blog

Monday, March 10, 2008

தோட்டா

சனிக்கிழமை வேறு படங்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் இந்த படத்திற்கு சென்றேன்.

ப்டம் ஆரம்பத்தில் ஒரு அம்மா ஒரு பையனோடு தன் கணவனை தேடி அலைகிறாள். கணவணை கண்டுபிடிக்கிறாள் ஆனால் அவனோ வேறு ஒரு பெண்ணோடி இருக்கிறான். இவளை அடித்து விரட்டுகிறான். இது ஒரு பழி வாங்கும் படமாக இருக்கும் என்று ஆரம்பிக்கிறது.

அந்த அம்மா இறந்தும் போகிறாள். அந்த பையனுக்கும், அந்த அம்மாவை அடக்கம் செய்வதற்கும் சந்திரசேகர் உதவி செய்கிறார். அந்த பையனுக்கு காசி கொடுத்து ஊருக்கு போக சொல்லி காசு கொடுக்கிறார். அவனோ போகாமல் ஒரு பஸ் ஸ்டாப்பிலேயே இருக்கிறான். அப்பொழுது அங்கே வரும் போலீஸ் அவனை எடுத்து ஒரு ரவுடியிடம் வளர்க்க கொடுக்கிறது. அவன் பெயரையும் தோட்டா என்று மாற்றுகிறது.

பிறகு ஜீவன் தனக்கு பழக்காமான பாணியில் பின்னியெடுக்கிறார். மிகக்கொடூரமான வில்லனாக ஜீவனை காட்டுகிறார்கள். ப்ரியாமணியை கொல்ல செல்லும் இடத்தில் அவள் சந்திரசேகரின் மகள் என்பதை அறிந்து உதவ நினைக்கிறார். அதனால் தன்னை வளர்த்த போலீஸ் கமிஷனரையே பகைத்தும் கொள்கிறார்.

கடைசியில் தன் தவறுகளுக்காக இறந்தும் போகிறார் ப்ரியாமணி கையால்.

பல தளங்களில் படித்தது போல படம் அவ்வளவு மோசம் இல்லை. இதைவிட கொடுமையான படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கின்றன.

அசுர வேகத்தில் செல்லும் ஒரு சாதாரண ப்டம் தோட்டா. அந்த வேகத்திற்காக பார்க்கலாம்.

1 comment:

Swamy Srinivasan aka Kittu Mama said...

soober short and sweet review maams...did you see anjathey? i liked it a lot. thottaa innum paakala...ticket innum kedaikkala...i mean online ticket :-)

Godzilla x Kong: The New Empire

 I like the old Godzilla and King Kong movies for the VFX and SFX they used to have. When I collected DVDs I bought them to enjoy those effe...