தேர்தல் ஜுரம்

பேப்பரை திருப்பினால் ஒவ்வொரு பக்கமும் தேர்தலை பற்றிய செய்திகள் தான். ஹிந்து பேப்பரை படித்து பழகியவனுக்கு டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு வித்தியாசமாக தான் உள்ளது. இந்த பத்திரிகையில் எல்லா கோமளித்தனகளும் மிகைப்படுத்தி எழுதப்படுகிறது. ஹிந்து பல விஷயங்களை விட்டு விடும். ஆனால் இந்த பத்திரிகை ரெண்டு வார்த்தை கூட போடுகிறது. இதனால் நாட்டில் நடக்கும் பல கெட்ட விஷயங்களை மனக்கசப்போடு படிக்க நேரிடுகிறது ஆனால் அவை அனைத்தும் உண்மை என்பதால் படிக்காமல் இருப்பதால் அது சரியாக போய்விடாது.

இதில் இப்பொழுது எல்லாம் வரும் முக்கிய செய்தி எல்லாரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது தன். படத்துடன் செய்தி போடுகிறார்கள். யாரும் அதன் மேல் நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை, ஒருவர் தப்பு செய்தல் தண்டிக்கலாம் நாடே தவறு செய்தால்?

இதில் குற்றவாளிகள் தேர்தலில் நிற்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் சஞ்சய் தத்தை நிற்க கூடாது என்று தீர்ப்பு கூறிவிட்டது. என்னவூ அவர் ஒருவர் தன் குற்றவாளி மாதிரியும் மற்றவர்கள் அனைவரும் உத்தமர்கள் மாதிரியும் உள்ளது இந்த தீர்ப்பு. இதற்கு அனைவரும் பாராட்டு வேறு.

நல்லதே நடக்காமல் இருக்கும் ஒரு நாட்டில் திடீரென்று ஒரு சிறு நல்லது நடந்தாலும் எப்படி பாரட்டப்படுமோ அவ்வாறு தன் இதுவும். இதில் ஸ்பெஷல் எதுவும் இல்லை. இதில் சந்தோஷப்பட ஒன்றும் இல்லை. எல்லா குற்றவாளிகளும் தண்டிக்கப்படும் வரை இந்த நாட்டுக்கு விடிவு இல்லை.

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point