பல நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல விறுவிறுப்பான படம் பார்த்த திருப்தியை தந்தது அருந்ததீ திரைப்படம். கிராபிக்ஸ் காட்சிகளாகட்டும், மிரட்டும் இசையாகட்டும், அனுஷ்க்கா மற்றும் சோனு சூதின் நடிப்பாகட்டும், டப்பிங் குரலாகட்டும் அனைத்துமே மிக அருமை. பல இடங்களில் வன்முறை அதிகமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. பலருக்கு அந்த காட்சிகள் கண்களை மூட வைக்கும்.
ஒரு மூர்க்கனை ஒரு பெண் கொல்கிறாள் ஆனால் அவளால் அந்த மூர்க்கனை முழுவதும் கொல்ல முடியவில்லை அவன் ஒரு அகோராதிபதி. அவன் அந்த பெண்ணின் மறு ஜென்மத்திலும் அவளை துரத்துகிறான். அவனிடம் இருந்து அவள் எப்படி தப்பிக்கிறாள் என்பதே கதை.
இந்திய திரைப்படங்களுக்கு மட்டும் ஆங்கில திரைப்படங்களை போல ஆடியன்ஸ் இருந்தால் அருந்ததீ மற்றொரு மம்மி என்பதில் சந்தேகமே இல்லை.
No comments:
Post a Comment