Search This Blog

Sunday, April 12, 2009

Evano oruvan

இந்த திரைப்படத்தை இன்று பார்த்தேன் இது "பாலிங் டவுன்" என்ற ஆங்கில திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும் நிறைய புது விஷயங்களை இதில் சேர்த்திருந்தார்கள். படத்தின் கரு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் இது என்னை மிகவும் ஈர்த்தது.

ஒரு மனிதன் செல்லும் இடத்தில் எல்லாம் தவறுகள் நடக்கும் பொழுது என்ன நடக்கிறது என்று காட்டியிருக்கிறார்கள். சங்கர் படங்களில் வரும் விஷயங்கள் தான் என்றாலும் இதில் வன்முறை எதற்கும் முடிவு கொடுக்காது என்று கூறியிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சங்கர் படங்களில் நமது மகிழ்சிக்காக வேண்டுமானால் வன்முறை ஜெயிப்பது போல் காட்ட முடியும் ஆனால் உண்மையில் நடைமுறையில் இது சாத்தியப்படாது. ஏன் என்றால் தவறு செய்பவர்களின் எண்ணிக்கை அவ்வளவாக உள்ளது. இதற்கு ஒரு அந்நியன் போதவே போதாது. பல நூறு அந்நியன் நமக்கு தேவை.

இந்த திரைப்படத்திலும் ஒரு நல்ல காவல்துறை அதிகாரி இருப்பதால் தன் படம் நகர்கிறது அது நிஜத்தில் நடக்குமா என்பது அரிதே. அப்படி என்றால் இந்த அநியாயங்களுக்கு என்ன தன் முடிவு என்று கேட்கிறவர்களுக்கு பதில், இதற்கெல்லாம் முடிவே இல்லை. நம் நாடு திருந்த கூடிய நிலையை எப்பொழுதோ தாண்டி விட்டது.

2 comments:

Niths said...

idu enna suddenaa tamil la blogging?? still it feels good to read tamil.. :)

நம் நாடு திருந்த கூடிய நிலையை எப்பொழுதோ தாண்டி விட்டது. - apo 2020 la vallarasu naada namma naadu aaganum nu solradu ellam enna? adellam chumma cinema dialogue dhan right??

Dany said...

i used to write in tamil then stopped appo appo time kedaikum pothu tamil

abdul kalam kanavu ithelam pechu potile first prize ku matum than uthavum

The Nun - Movie

Yes the demon in Nun costume looks scary. Even in one of the earlier movies when they show this painting it had good impact. But beyond that...