ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மை பயப்பட வைக்கிறார்கள். ரவுடிக்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதில் ஷங்கர் மற்றும் கௌதம் மேனன் முன்னிலையில் இருந்தனர் ஆனால் இந்த படத்தில் இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கும் ஒவ்வொரு ரவுடி கதாபாத்திரமும் மனதில் பீதியை உண்டு பண்ணுகிறார்கள்.
சென்னை முழுதும் இப்படிப்பட்ட மக்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்று நினக்கும் பொழுது எச்சில் விழுங்க வேண்டிய அளவுக்கு பயம் வருகிறது.
படத்தில் வரும் வில்லன்கள் செய்யும் காரியங்கள் நம்மை மிரள செய்கின்றன. ஆனால் படத்தின் கதை ஒன்றும் பெரிதில்லை. ஆதி காலத்தில் இருந்து வரும் அதே பழிவாங்கும் கதை தான் ஆனால் அந்த கடைசி சில நிமிடங்கள் நமக்கும் நரம்புகள் முறுக்கேறுகின்றன.
படம் தொய்வு ஏற்படாமல் சென்றாலும் சில காட்சிகள் தேவையில்லாமல் வருவதை போல் உள்ளது. பாடல்கள் எங்கேயே கேட்டவை போல உள்ளது. சாவை பிரதானபடுத்தி வரும் பாடல் சற்று overdose தான்.
1 comment:
ithula naan first day first show vera... ena koduma sir ithu
Post a Comment