Search This Blog

Saturday, February 05, 2011

யுத்தம் செய்

மிஷ்கினின் அஞ்சாதே எனக்கு பிடித்த படங்களில் ஒன்று அதே போல் சேரனின் தவமாய் தவமிருந்தும் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. இவர்கள் இருவரும் இணந்தால்? ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஆனால் ….

வெளிநாட்டிலும் சரி நம் நாட்டிலும் சரி ஒரு ஆணின் உறுப்பையோ அல்லது பெண்ணின்
உறுப்பையோ செக்ஸ் நோக்கம் இல்லாமல் திரையில் காட்டிவிட்டால் அது ஒரு “ஆர்ட்” அல்லது ஒரு கலைப் படம் மிகவும் realistic ஆக எடுக்கப்ப்பட்ட படம் என்று பெயர் பெற்று விடும். நம்ம ஊர் திரைப்படங்களில் இப்படி பட்ட காட்சிகள் வருமா? இப்படி பட்டவைகளை குறித்து நேரடியாக வசனங்கள் இடம் பெற முடியுமா? என்ற கேள்விக்கு மட்டும் விடை அளிக்கிறது இத்திரைப்படம். மற்றபடி உப்பு சப்பில்லாமல் செல்கிறது.

Severe ஆக தலை வலிக்கும் மனிதனின் கதாப்பாத்திரத்தை சேரனை தவிர வேறு யாராலும் இவ்வளவு தத்ரூபமாக நடிக்க முடியாது. புருவத்தை இரண்டு விரல்களால் பிடித்துக் கொண்டு அவர் தலை கவிழ்ந்து இருக்கும் நொடிகள் அருமை. சேரனை ஒரு tough guy ஐ போல காட்டியிருப்பார்களோ என்று நினைத்தேன் ஆனால் தவமாய் தவமிருந்து சேரனை இதிலும் பார்க்க முடிகிறது. தங்கச்சி தங்கச்சி என்று துடிக்கிறார் ஆனால் அதில் something artificial.
மிஷ்கின் இந்த படத்தை குறித்து யோசித்த பொழுது “சும்மா ஒரு பிணக்கிடங்கை தத்ரூபமாய் காட்டுகிறோம் மச்சான்” என்று நினைத்தே கதை எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். படம் முழுவதும் பிணங்கள், சுன்னாம்பில்லாத காரை பெயர்ந்த வீடுகள், சேரனின் சதா சர்வ காலமும் தலை வலிக்கும் ஒரு உணர்ச்சி மிகுந்த முகம், பல வித ஒப்பாரிகள் என்று படம் மெதுவாக செல்கிறது. “இந்த twist ஐ பார்த்து எல்லாரும் வாயடைப்பார்கள்” என்று நினைத்த twist is very predictable.

West ல் சர்வ சாதாரணமாகவும் நம் ஊரில் சற்று அரசல் புரசலாகவும் இருக்கும் சில perversion சை முதல் முறையாக தமிழ் திரையில் பார்த்தேன்.

திரைப்படங்களுக்கே உரித்தான clichés கும் பஞ்சம் இல்லை இப்படத்தில். துப்பாக்கியால் சுடப்பட்டும் எல்லா flashback யும் கூறிவிட்டு உயிரை விடும் ஒரு தியாகி, ஒருவர் குண்டால் சுடும் பொழுது குறுக்கில் பாய்ந்து காப்பாற்றி தன் உயிரை விடும் ஒரு தியாகி என்று நிறைய இருக்கிறது. மற்ற படங்களில் மட்டும் இதெல்லாம் இல்லையா என்று கேட்பவர்களுக்கு மிஷ்கில் எப்பொழுதும் அப்படி பட்ட படங்களை குறை கூறுபவர் ஆனால் அவர் படமும் அப்படி தான் இருக்கிறது.

பல காட்சிகள் பல ஆங்கில படங்களை நினைவு படுத்துகின்றன. ஷங்கர் படங்களில் பிணக்கிடங்கு CSI serial ல் வருவதை போல இருக்கும் ஆனால் மிஷ்கின் படத்தில் அது ஒரு அருவருக்கதக்க இரு இடமாக காட்டப் படுகிறது. கேட்டால் இது தான் realistic movie என்று கூறுவார்.

ஒரு குஜால் பாட்டு இருக்கிறது ஆனால் அதிலும் energy இல்லை. அந்த பாடலில் சாருநிவேதிதா தோன்றுவதாக கூறியிருந்ததால் கண்களை அகல விரித்துப் பார்த்தால் அவர் தோன்று விநாடிகள் ஐந்துக்கும் குறைவு.

கவுதம் மேனை அமெரிக்கா எல்லாம் சென்று எடுத்த வேட்டையாடு விளையாடு படத்தை மிஷ்கின் சென்னையிலேயே சிம்பிளாக எடுத்துள்ளார்.

படத்தில் பல கதாப்பாத்திரங்கள் வருகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். யார் எதற்காக யோரோடு லிங்க் ஆகிறார்கள் என்பது மிக கூர்மையாக கவனிக்க வேண்டும்.
மொத்தத்தில் ஒரு நல்ல குழுவிடமிருந்து சலிப்பை கொடுக்கும் ஒரு திரைப்படம்.

No comments:

Dell Video Lag Problem

I was struggling with a problem in my laptop where videos would take lot of time to play. Whether it is a video file or video embedded in a ...