கறுப்பு பணம் - 2

மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று சொன்னபொழுது இது நிச்சயம் நல்லது என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் அதை செயல் படுத்தியவிதம் அந்த எண்ணத்தை பொடி பொடியாக்கிவிட்டது.

இந்தியா போன்ற கட்டுமானத்தில் பின்தங்கிய நாட்டுக்கு இது சரிப்படாது. குறிப்பாக சென்னை புயலில் சிக்கிய இந்த நாட்களில் இது தெளிவாக புரிந்தது. எங்குமே அட்டையை உபயோகிக்க முடியவில்லை. காரணம் தொடர்பு சாதனங்கள் இயங்கவில்லை. ரூபாய் நோட்டுக்களை இல்லை. இதனால் தொல்லை அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

இன்னும் வங்கிகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. நம் நாடு ஒன்று இப்படி ஒரு சர்வாதிகாரியிடம் மாட்டுகிறது அல்லது ஒரு முதுகெலும்பில்லாத ஆட்களிடம் மாட்டுகிறது .

ஆனால் இதுவரை தமிழர்கள் மட்டுமே இழித்தவாயர்கள் என்று நினைத்திருந்த எனக்கு வடஇந்தியர்களும் சளைத்தவர்களில்லை என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point