கறுப்பு பணம்

எல்லா  இடத்திலும் இப்பொழுது பேசப்படும் ஒரே வார்த்தை கறுப்பு பணம். அநேகர் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். கறுப்பு பணம் இல்லாதவர் இந்நாளில் உண்டா? நம்முடைய பொருளாதார அமைப்பு அனைத்துமே கறுப்பு பணத்தை ஊக்குவிக்கும் வண்ணமே உள்ளது. இந்நிலையில் கறுப்பு பணம் இல்லாதவர் ஒருவர் கூட இருக்கமுடியாது.

அப்படியானால் அநேகர் இதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன காரணம்? பெரிய முதலைகள் மாட்டுவார்களாம். மறுபடியும் சிறு தவறு செய்தால் அது தவறு இல்லை பெரிய தவறு செய்பவனே குற்றவாளி என்னும் ஒரு தவறான மனித மனதின் வெளிப்பாடே இது.

அது மட்டும் அல்லாது தனக்கு பத்து ரூபாய் நட்டம் வந்ததாலும் அடுத்தவனுக்கு பெரிய நட்டம் வந்தால் போதும் என்னும் இன்னொரு தவறான எண்ணத்தின் வெளிப்பாடும் இது.

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point