பல்லவன்

என்னுடைய முந்தைய பதிவில் சில காட்டுமிராண்டி ஒட்டுனர்களை பற்றி எழுதியிருந்தேன். அடுத்த நாளே ஒரு சென்னை பஸ் ஓட்டுனர் தன் காட்டுமிராண்டித்தனத்தினால் சிக்னலில் ஒழுங்காக நின்று கொண்டிருந்த ஒரு மனிதனை இடித்து கொன்று போட்டார். இப்படிப்பட்ட உருப்படாத பல ஒட்டுனர்களால் பல அப்பாவி உயிர்கள் இந்த ஊரில் பலியாகி கொண்டு இருக்கின்றன.

இந்த காட்டுமிராண்டித்தனம் இதில் மட்டும் இல்லாமல் எல்லா விஷயங்களிலும் வியாபித்து உள்ளது. அயல் நாடுகளில் விதிகளை மீறுபவர்கள் இல்லையா என்ற கேள்விக்கு, அங்கேயும் விதிகளை மீறுபவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களின் சதவீதம் மிகவும் குறைவு. அங்கே சராசரி மனிதன் விதியை மீறுவதில்லை, கிறுக்குபிடித்தவனே மீறுவான். ஆனால் இங்கேயோ சராசரிமனிதனில் இருந்து அனைவரும் மீருகிறார்கள். ஒரு பயம் இல்லை. இதற்கு ந்மது அரசியல்வாதிகளும், போலீஸும் சப்போர்ட் வேறு.

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point