Search This Blog

Monday, June 11, 2007

Madurai - Thiruparangundram

இந்த வாரம் ஒரு நண்பருடைய திருமணத்திற்காக மதுரை வரை சென்று வந்தேன். திருமணம் திருப்பரங்குன்றத்தில் ஒழுங்கு செய்ய பட்டு இருந்தது. வெள்ளி மாலை அனைவரும் கிளம்பினோம் எப்பொழுதும் போல் இரயில் பயணம் இனிதாக இருந்தது. காலை ஏழு மணிக்கு மதுரை சென்றோம். மதுரை செல்வது இதுவே முதல் முறை. சிலரின் அறிவுறை படி திருப்பரங்குன்றத்திற்கு பஸ் பிடித்தோம். சாலைகள் சென்னையை போல் பெரிதாக இல்லாவிட்டாலும் நெருக்கடி குறைவாக இருந்தது.

கடைசியாக திருப்பரங்குன்றத்தில் இறங்கினோம். சிறு வயதில் இருந்தே இப்படி தூரத்தில் உள்ள இடங்களை சிற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. திருப்பரங்குன்றம் அந்த காலை வேளையில் அந்த சிறிய கிராமத்திற்கே உரிய சுறுசுறுப்போடு இருந்தது. இங்கே உள்ள முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகையால் எங் திரும்பினும் ஒரு பக்தி மயம்.

பேருந்து நிலையத்தின் அருகே ஒரு அழகான பூங்கா. சிரிது தள்ளி ஒரு அழகான இரயில் நிலையம். மனிதனால் இயக்கப்படும் இரயில் கேட். வித்தியாசமான நிறங்களில் பேருந்துகள். ஓரு அவசரம் இல்லாத இயக்கம்.

மெதுவாக நடந்து சென்று 1 கி மீ துலைவில் இருந்த விடுதியை கண்டுபிடித்தோம். விடுதி ஆஹா ஒஹோ என்று இல்லாவிட்டாலும் கச்சிதமாக இருந்தது. எங்கள் அரையில் இருந்து குன்று மிகவும் அருமையாக தெரிந்தது. அந்த படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த பதிவில் மீதியை தொடர்கிறேன்.

3 comments:

Balaji S Rajan said...

Madurai, Tiruparankundram... reminds me of my old trips to Madurai. Every trip had been for a unique occasion and it was wonderful. It is a great place! No wonder. I felt like I was there for a OC trip with you! Who knows probably I may even get dreams of Madurai tonight. LOL!

Unknown said...

Ramesh ippo travelogue ezuda aarambithuvitaar...idu kooda romba interesting a iruku as always :) keep it going...

Dany said...

Thanks Niveditha.

Balaji,

My aim for posting this is to kindle those memories for those whose home town is Madurai

Dell Video Lag Problem

I was struggling with a problem in my laptop where videos would take lot of time to play. Whether it is a video file or video embedded in a ...