மடிப்பாக்கம்

ஏற்கனவே நான் பல பதிவுகளில் கூறியிருந்த படி மடிப்பாக்கம் சாலையில் பாதாள சாக்கடை வேலை நடந்து வருகிறது. அங்கே வேலயை ஆரம்பிப்பதற்க்கு முன்பு அந்த சாலயை உபயோகிக்கும் மக்களுக்கு மாற்று வழி ஏற்ப்படுத்திவிட்டு வேலயை ஆரம்பித்து இருந்தால் வேலயும் சீக்கிரம் முடிந்து இருக்கும் மக்களுக்கும் இடையூறு இருந்து இருக்காது. அப்படி செய்யாததின் விளைவை இப்பொழுது மக்கள் மற்றும் காவல்துறை அநுபவிக்கிறது.

சில நாட்களாக சென்னையில் மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. சென்னைக்கு மழை மிகவும் அவசியம், தண்ணீர் கஷ்டத்தினால். ஆனால் சென்னையின் தோண்டப்பட்ட சாலைகள் சகதி காடாக மாறி மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளது. தவறி விழுந்தால் முதல்வன் பட அர்ஜுன் ஆகிவிடுவோம்.

நூறு வருடங்களுக்கு முன்பு செய்து இருக்கவேண்டிய விஷயங்களை இப்போது தான் அதுவும் ஆறப்போட்டு செய்து கொண்டு உள்ளோம்.

என்று தான் நமக்கு விடிவு வருமோ !

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point