குப்பை லாரி

இன்று எனக்கு முன்னே ஒரு குப்பை லாரி சென்றது. எல்லா குப்பை லாரிகளையும் போல் அதற்கே உரிய நாற்றத்தோடு சென்றது. அதை மன்னித்து எற்றுக்கொள்ளலாம் ஆனால் அதன் பின் பகுதி திறந்து இருந்தது அதன் வழியாக அத்தனை குப்பைகளும் வெளியே பறந்து கொண்டு இருந்தன. குப்பையை எடுக்கிறார்கள் பிறகு வெளியே பறக்க விடுகிறார்கள். அதை எடுத்ததே அபத்தமாகிறதே..

எந்த பெட்ரோல் லாரியாவது ஓழுகி பார்த்ததுண்டா, ஆனால் எல்லா தண்ணி லாரியும் ஒழுகுகிறது ஏன்? பெட்ரோல் லாரியை பழுது பார்த்த நமக்கு தண்ணீர் லாரியை பழுது பார்க்க ஏன் தோன்றவில்லை? திமிர். தண்ணீர் தானே என்ற திமிர். இதற்க்கெல்லாம் ஒரு நாள் நமக்கு பதில் காத்துக்கொண்டு இருக்கிறது.

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point