நான்கு நிகழ்வுகள்

இன்று பைக்கில் வந்து கொண்டிருக்கும் பொழுது நான்கு காரியங்களை கண்டேன்.

வீட்டை விட்டு கிளம்பிய உடனே ஒரு ஆட்டோ ஓட்டுனரும் ஒரு பைக் ரைடரும் சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள். நான் பார்த்த வரை தவறு ஆட்டோ ஓட்டுனர் மீது தான் ஆனால் அவரை எதிர்த்து பேசினால் அடி தான் ஆனாலும் பைக் ரைடரும் விடாமல் சண்டை போட்டு கொண்டு இருந்தார்.

சிறிது தூரம் சென்றதும் ஒரு ஸ்கூல் சிறுவனை சுற்றி மக்கள் ஒரு லாரி நடு ரோடில் நின்று கொண்டு இருந்தது. லாரி டிரைவரை காணோம். திடீர் என்று ஒருவருக்கு கூட்டத்தில் அடி விழுந்தது அது தான் டிரைவர் என்று அறிந்து கொண்டேன்.

சிறிது தூரம் சென்றதும் ஒரு சைக்கிள் ஓட்டி கார் வருவதை மதிக்காமல் ரோடை கடந்தான் சிறிது கார் ஓட்டுனர் தவறியிருந்தாலும் மோதியிருப்பார். அவர் காரை நிருத்தி அவனோடு சண்டையை ஆரம்பித்தார்.

வேலை தளத்தை நெருங்கும் நேரத்தில் ஒரு ஷேர் ஆட்டோவை ஒரு பஸ் உரசி சிறிது கிழித்து விட்டு சென்றது. ஆனால் சண்டை ஏதும் வரவில்லை.

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point