Search This Blog

Wednesday, September 26, 2007

மலைக்கோட்டை

இந்த பிளாகின் வாசகர்கள் எண்ணிக்கை சராசரியாக 15 ல் இருந்து இப்பொழுது 3 ஆக ஆகியுள்ளது.
***
மலைக்கோட்டை படத்தின் டிரைலர் பார்த்தேன், திமிரு திரைப்படமும் பார்த்தேன் சன் தொலைக்காட்சியில். விஷால் படங்கள் எல்லாமே ஒரே மாதிரி இருப்பது போல் உள்ளது அது மட்டும் இல்லாமல் காட்சிகள் முதற்கொண்டு, அவரின் லுக்ஸ் வரை அனைத்து ஒரே ரிப்பீட் போல் உள்ளது.

கடந்த சனிக்கிழமை 'சிட்டி ஆப் காட்ஸ்' என்ற திரைப்படத்தை பார்த்தேன். மிக மாறுபட்ட படம். பிரேஸில் நாட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் நடைபெரும் வன்முறைகளை படம் பிடித்து காட்டுகிறார்கள். வன்முறை செய்பவர்கள் பெரிய ஆட்கள் இல்லை, 5 ல் இருந்து 20 வயதுக்குள் உள்ளவர்களே. இது உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படமாம். படத்தில் திரைக்கதையில் இருந்து, கேமரா, ஆர்ட், நடிகர்கள் என அனைத்தும் அறுமை.

நம்ம ஊர் ஆட்கள் எப்போது மருதமலை, மலக்கோட்டை போன்ற படங்களை விட்டு வித்தியாசமான படங்களை எடுப்பார்களோ. காப்பி அடித்தாலும் நல்ல படங்களை காப்பி அடிக்க மாட்டேன் என்கிறார்கள்.
**

இன்று ஹிந்து பத்திரிக்கையில் தி.நகர் ரெங்கநாதன் தெருவின் படத்தை போட்டு இருந்தார்கள், இந்த இடத்தில் எல்லாம் நம்ம ஊர் ஆட்களால் ரோட்டை தோண்டவே முடியாது என்று நினைப்பவர்கள் முகத்தில் கரி பூசும் விதமாக ரோட்டின் நடு மையத்தில் அகலமாக அருமையாக தோண்டி போட்டு உள்ளார்கள்.

வால்க சனநாயகம் !

2 comments:

Balaji S Rajan said...

I saw today's Hindu online and saw the picture before reading your post. What I felt you have written. That is great coincidence Dan.

Dany said...

Balaji,

did you see the sharp rods protruding? they have made sure whoever falls will be fatally injured.

Ikiru

 Just finished watching this movie and what a profound movie. This is my first Akira Kurosawa movie and I was simply blown away by the movie...