நட்பு

காந்தி ஜெயந்தி அன்று என்னுடைய பைக்கை பழுது பார்க்க கொண்டு சென்றிருந்தேன். அங்கு நின்று கொண்டு சுற்றிவர இருந்த மக்களை பார்த்தேன். கூட்டமாக சில மக்கள் நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் பார்ப்பதற்கு சாதாரண கீழ்த்தட்டு மக்களை போன்று தான் இருந்தார்கள். ஆனால் அனைவரும் ஒரு அரசாங்க ஊழியம் அல்லது ஒரு பெரிய கட்சியின் தொண்டர்கள் போல் இருந்தனர். இவர்களுக்கான அடையாளம் ஒரு திமிர் தனமான பார்வை, சட்டையின் முதல் இரண்டு பித்தாங்களை கழட்டிவிட்டு லேசாக தூக்கி விட்டிருப்பார்கள். சிலர் வெற்றிலையை போட்டுக்கொண்டு அங்கே தாதா போல் இருப்பவர்களிடமே மிக நட்போடு பேசிக்கொண்டு இருப்பார்கள்.

அப்பொழுது தான் ஒன்று யோசித்தேன் இப்படி கீழ்த்தட்டு மக்களிடையே நட்பு பாலம் அதிகமாக உள்ளது. பலர் அடாவடிக்காரர்களக இருப்பார்கள். ஏன் என்று யோசித்தால் அவர்கள் அவ்வாறு இருந்தால் தான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும். அடாவடியும், ந்ட்பும் அவர்களுக்கு மிகவும் துணை செய்கிறது. பணக்காரர்கள் பணத்தை வைத்து அனைத்தையும் சாதித்து கொள்வார்கள், கீழ்த்தட்டு மக்கள் உடல் பலத்தை உபயோகித்து அனைத்தையும் சாதித்து கொள்வார்கள். இந்த நடுவே மாட்டிக்கொண்ட நடுத்தரவர்கம் ந்ட்பும் இல்லாமல், சத்தம் போடவும் தெறியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும். அதற்கு காரணம் நடுத்தரவர்கத்திற்கே உரிய பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்களே காரணம்.

Comments

K Praveen said…
nice post Ramesh!
cowey said…
sobbada... arumai da. fantastic.
Dan said…
welcome praveen after long time

cowey nandri.
Anonymous said…
rombha nalla irukku

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point