அத்திதி

நண்பரின் திருமணத்திற்காக இந்த வாரம் நெல்லூர் சென்றிருந்தேன். திருமணம் முடிந்தவுடன் இரயிலுக்கு நிறைய நேரம் இருந்ததால் "ஹேப்பி டேஸ்" என்ற தெலுங்கு படத்திற்கு செல்லலாம் என்று அங்கு இருந்த கிருஷ்ணா காவேரி என்ற திரையரங்குக்கு சென்றோம். ஹேப்பி டேஸ் படத்திற்கு நுழைவுச்சீட்டு கிடைக்கவில்லை. அதனால் அத்திதி என்ற படத்திற்கு சென்றோம்.

திரையரங்கு மிகவும் அருமையாக இருந்தது. 40 ரூபாய்க்கு குளிரூட்டப்பட்ட திரையரங்கு பெரிதாகவும் இருந்தது. திரையரங்கு முழுவதும் நிரைந்தது. மஹேஷ் பாபுவை குறித்து படித்திருக்கிறேன் அவரின் போக்கிரி, அத்தடு போன்ற படங்கள் ஆந்திராவில் பட்டயை கிளப்பியுள்ளன. அத்திதிக்கு போக்கிரி அளவுக்கு வரவேற்பு இல்லை என்று விமர்சனங்களில் படித்து இருந்தேன்.

படம் ஆரம்பித்தது சவுண்ட் சிஸ்டம் மிகவும் அருமையாக இருந்த்து. தன்னை எடுத்து வளர்த்தவர்களை தன் கண் முன்னேயே சுட்டு கொன்று பழியையும் ஹீரோ மீதே போட்டு சென்ற வில்லனை ஹீரோ தேடி கொல்வதுதான் கதை.

மஹேஷ் பாபுவின் அறிகுகம் படு வேகம். அவர் அடிக்கும் ஒரு ஒரு அடியும் இடி போல் இறங்குகிறது. ஆசிஷ் வித்யார்த்தியோடு அவர் சும்மா மற்ற படங்களை போல பூச்சாண்டி காட்டிக்கொண்டிராமல் எடுத்தவுடனேயே பட்டயை கிளப்புவது அருமை. சண்டை காட்சிகள் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்.

பாடல்களும் இசையும் அதிரடி.

காதல் காட்சிகள் ஒரு லெவலுக்கு மேல் போரடிக்க ஆரம்பித்து விட்டது. இடைவேளை வரை விறுவிறு என்று சென்ற கதை இடைவேளைக்கு பிறகு கன்னாபின்னா என்று சென்று விட்டது. ஆனால் மஹேஷ் பாபுவுக்கு ஏன் ஆந்திராவில் இவ்வளவு கிரேஷ் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

Comments

Most Viewed

Ingrid Bergman

9 1/2 Weeks

Match Point