நேற்று இரவு ஒன்பது மணி வாக்கில் பைக்கில் சென்று கொண்டு இருந்தேன். துரைப்பாக்கம் 100 அடி ரோடில் செல்ல வேண்டி வந்தது. அந்த சாலையில் விளக்குகள் கிடையாது. சில நாட்களுக்கு முன்பு வரை மிக மோசமாக இருந்த சாலை கடந்த சில் நாட்களாக ஒழுங்காக உள்ளது இருந்தாலும் திடீர் பள்ளங்கள் உண்டு. சாலையின் ஒரு புறம் பெரிய ஏரி மறுபுரம் ஏறி இருந்த இடத்தில் ஒரு பெரிய மலை முழைத்து இருந்தது. அது ஒரு குப்பை மலை.
மாலை வேளையில் இந்த சாலையில் செல்வது மிக ஆபத்தானது ஏனென்றால் சிறு சிறு பூச்சிகள் காற்றில் பறந்து கொண்டு இருக்கும்.
நேற்று செல்லும் போது பூச்சிகள் இல்லை, விளக்கும் இல்லை கும்மிருட்டில் குத்து மதிப்பாக ஓட்டிக்கொண்டு இருந்தேன். திடீரென்று ஒரு ஆட்டோ மிக வேகமாக (காட்டுமிராண்டித்தனமாக) என்னை முந்தி சென்றது. நான் ஓரமாக சென்று கொண்டிருந்ததால் அதிகம் பாதிப்படையவில்லை.
சில விநாடிகளில் ஒரு ஸ்கூட்டரில் ஒருவன் என்னை வேகமாக கடந்து சென்றான். என்ன என்று பார்த்தால் அவன் அந்த ஆட்டோவை விரட்டி பிடித்து ஏதோ திட்டினான். அந்த ஆட்டோ அவனை ஓவர்டேக் செய்யும் போது கோபபடுத்தி உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் ஆட்டோவில் இருந்தவர்கள் ஸ்க்க்ட்டர் ஆளை பார்த்து "ஏய்ய்ய்ய்ய்" "ஓய்ய்ய்ய்ய்" என்று கத்த ஆரம்பித்தனர். நம் ஆள் பயந்து விட்டான் ஸ்கூட்டரை மெதுவாக்கி பின்வாங்கினான். ஆட்டோவும் மெதுவாகியது. மறுபடியும் "ஏய்ய்ய்ய்ய்" "ஓய்ய்ய்ய்ய்". நம் ஆள் ஸ்கூட்டர் வேகத்தை கூட்டி இருட்டில் பறந்தான். ஆட்டோவும் விடாது தொடர்ந்தது.
தூரத்தில் இரண்டும் வெளிச்ச புள்ளிகள் ஆயின.
சில விநாடிகளில் அந்த ஸ்கூட்டர் ஆளை விரட்டி பிடித்த ஆட்டோ அவனை ஓரம் கட்டியது. அவனும் "என்ன என்ன" என்று ஒரம் கட்டினான். ஆட்டோவில் இருந்து இருவர் இறங்கினர். அதற்குள் அவர்களை நான் கடந்து விட்டேன். நிச்சயமாக ஸ்கூட்டர் ஆளுக்கு ஒரு அட்யாவது விழுந்து இருக்கும். தவறோ ஆட்டோவின் மீது ஆனால் அவர்கள் ரவுடி என்பதால் அவர்கள் வைப்பதே சட்டம். என் கவலை எல்லாம் ஸ்கூட்டர் ஆள் கொல்லப்பட்டிருக்க கூடாது என்பதே.
வழியில் நிறுத்தி ஸ்கூட்டர் ஆளுக்கு உதவ வேண்டும் என்று தோன்றினாலும் அது எந்த வகையிலும் உதவாது என்பதாலும், நிறுத்தினால் என்ன நடக்குமோ என்ற பயத்தினாலும் நான் நிறுத்தவில்லை.
துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதே இந்த #@$%@#$%$ ரவுடிகளிடம் பழகும் முறை.
Search This Blog
Friday, February 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)
Dell Video Lag Problem
I was struggling with a problem in my laptop where videos would take lot of time to play. Whether it is a video file or video embedded in a ...
-
The title of this blog is a famous title of Rajesh Kumar's tamil novel. Those who are familiar with tamil novels must have heard of Raje...
-
நான் பொருட்காட்சிக்கு சென்று 15 வருடங்களாவது இருக்கும். பொருட்காட்சியை பற்றி மனதில் பசுமையான நினைவுகளே உள்ளன. குறிப்பாக இந்தியன் இரயில்வே ஸ்...
-
In our country everyone wants to come last and go first. You can see this anywhere you go. Few common places where you can see such thing ar...
2 comments:
Dan,
Your writings brings back so many memories to my mind. Darkness, overspeeding, nasty roads, public nuisance many things. I had been a silent victim for many things in the past. The only difference is I had stopped my vehicle on such occasions. That was one of the important reason to possess a Enfield in those days. The moment they heard the sound, they(rowdies) ran away and I scared them like this. LOL...If you have had an Enfield I am sure they would have ran away. (of course you need an Oil well too)
i remember once you mentioned about your enfield when someone violated signal near nandanam
Post a Comment