Search This Blog

Tuesday, May 29, 2007

சென்னையில் பாம்பு

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு சர்ச்சுக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன் ஒருவன் ஓடி வந்தான். "பாம்பு பிடிக்கிறவர் போன் நம்பர் வேண்டும்" என்றான். எங்கள் வீட்டுப்பக்கம் பாம்புகள் நடமாட்டம் உண்டு. என் தம்பியை கூப்பிட்டு வாங்கி கொடுத்தேன்.

சர்ச்சு முடிந்து வந்தவுடன் அவர்கள் பிடித்தது ஒரு பெரிய சாரை பாம்பு என்று அற்ந்து கொண்டேன். பார்த்தவர்கள் அது மிகவும் பெரிதாக இருந்ததாக கூறினர்.

இதற்கு முன்பு பலமுறை பாம்புகள் வந்துள்ளன, இதில் கஷ்டம் என்ன என்றால் அவைகள் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தாலும் நமக்கு அவைகள் தெரியாது. எங்கேயாவது எதையாவது நோண்டும் போது விருட்டென்று வெளியே வரும். கடவுள் தான் ஒவ்வொரு முறையும் அதை கண்களில் பட வைக்கிறார்.

**

சிவாஜி டிரைலர் பார்த்தே, ரஜினி மிகவும் அம்சமாக உள்ளார். எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. சீக்கிரம் வாங்க சிவாஜி.

Monday, May 28, 2007

போலீஸ்

வெள்ளிக்கிழமை. எப்பொழுதும் இல்லாமல் அன்று இ சி ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தேன். நேரம் 6:10 PM. என்றைக்கும் விட அன்று குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று குறுக்கே ஒரு போலீஸ். ஒரம் ஒரம் என்று கூறி ஒரம் கட்டப்பட்டேன். 3 போலீஸ் இருந்தனர் போலீஸை விட அங்கே இருந்த மற்றவர்களின் கூட்டம் அதிகம்.

லைஸன்ஸ் கேட்டனர், கொடுத்தேன், பைக்கில் இருந்து இறங்க சொன்னார்கள், ஏன் என்றேன்? நான் வேகமாக வந்தேன் என்றனர். எனக்கு கோபம் மற்றும் சுய இரக்கம் மாறி மாறி வந்தன. எத்தனையோ பேர் பல்ஸர், கரிஷ்மா என்று அரக்கன் களை போல் கண் எதிரே போய்க்கொண்டிருக்கும் பொழுது 55 km/hr ல் போய்க்கொண்டிருந்த என்னை இடித்தது வெறுப்பு எற்றியது.

ஸ்பீட் லிமிட் என்ன என்றேன், மனசாட்சியே இல்லாமல் 40 km/hr என்றார்கள்.

சுற்றிலும் சாராயம் குடித்து பிடிபட்ட சிலரும் "ஸார், ஸார், ஸார்" என்று கெஞ்சி கொண்டு இருந்தனர்.

இதற்கு மேலும் இங்கே நின்றால் ந்மது மானம் தான் போகும் என்று நினைத்து 300 ரூபாய் தண்டம் அழுது விட்டு புறப்பட்டேன்.

Friday, May 25, 2007

தினகரன்

சன் தொலைக்காட்சியின் வியாபார நுணுக்கங்களை பார்க்கும் பொழுது வியப்பு நிச்சயம் வருகிறது. வியாபாரத்தில் எங்கேயோ இருந்த குங்குமம் இதழை மிகவும் பாடுபட்டு ஒரு முன்னனி இதழ் வரிசையில் கொண்டு வந்து விட்டனர். எல்லாம் மிகவும் சுலபமாக செய்து விட்டார்கள். ஒன்றுமில்லை திரும்ப திரும்ப குங்குமம் மட்டுமே முன்னனி என்று கூறி அதை ஒரு அளவுக்கு நிரைவேற்றியும் காட்டிவிட்டார்கள்.

அவர்களது அடுத்த முயற்சி தான் தினகரனை முன்னே கொண்டு வரவேண்டும் என்ற முயற்சி ஆனால் அது எங்கே சென்று முடிந்தது என்று எல்லோரும் அறிவர்.

நான் பேச வேண்டும் என்று வந்த காரியமே வேறு. நம் ஊரில் "porn" எந்த உருவிலும் தடை செய்ய பட்டு உள்ளது. ஆனால் எந்த ஒரு புத்தகத்தையோ அல்லது நாளிதழையோ எடுத்தால் அதில் 50% "porn" porn இல்லாதது போல ஆக்ரமித்துள்ளது.

நேற்றைய தினகரனில் தலைப்பு செய்தியாக வந்தது "நர்சுக்கு M L A முத்தம். கிளு கிளு படங்கள்". நடிகைகள் அரைகுரை உடையில் காட்சி தராத பத்திரிக்கையே இல்லை எனலாம். விகடன், குமுதம் எதுவும் விதிவிலக்கல்ல.

என்னடா நீ என்ன பெரிய உத்தமனா என்று நீங்கள் கேட்பீர்கள். நான் சுட்டிக்காட்ட விரும்புவது இந்தியாவில் இருக்கும் முரண்பாடுகளை தான்.

ஒரு பக்கம் பத்தினி வேஷம் மற்றொரு பக்கம் இன்னொரு வேஷம். என்ன கொடுமை சரவணண் இது?

Thursday, May 24, 2007

Political Equation

It will be interesting to see what developments, the problems which happened in TN political arena in the last few weeks, will bring to Tamilnadu politics. From the day I was able to understand politics it has always been DMK vs ADMK.

Sun TV which came became popular due to Anti Jaya wave and being the first Tamil satellite channel now has become orphan. Sun TV's name became synonymous with DMK and vice versa. Its going to be difficult for both of them. But for us the people we are in for some interesting changes.

The new channel to be launched will be a damp squib. I dont think people has more apetite for another Tamil channel.

Who will align with whom, who will win the coming elections everything is going to become unpredictable.

America which got caught in its own web of Afghanistan and Iraq, can be compared to whats happening in TN politics. The politicians are now caught in their own web of deceit, vengeance, corruption etc.

One thing is for sure, the change wont be free of corruption, violence but it will be a change.

Wednesday, May 23, 2007

மேடவாக்கம்

மேடவாக்கத்துக்கும் சோழிங்கநல்லூருக்கும் இடையே ஒரு சாலை உண்டு. அது ஆஹா ஓஹோ என்று இல்லை என்றாலும் ஒரு அளவுக்கு நல்ல சாலையாக இருந்தது. அதை இப்பொழுது சாலை போடுகிறேன் பேர்வழி என்று சொல்லி கெடுத்து வைத்து உள்ளனர். சாலையின் இரண்டு பக்கமும் புது சாலை போட்டு உயர்த்தி நடுவே பள்ளமாக விட்டு, இருந்த சாலையையும் சுருக்கி விட்டனர்.

அதைவிட கொடுமை மடிப்பாக்கம் சாலை முழுவதையும் தோண்டி போட்டு, மக்களை படாத பாடு படுத்தி வருகிறர்கள். 50 வருடத்திற்க்கு முன்னே செய்திருக்க வேண்டிய வேலயை இப்பொழுது செய்து வருகிறார்கள்.

Monday, May 21, 2007

சென்னையில் வெயில்க்காலம்

ஒவ்வொரு நாள் மாலையும் என்னவோ மழை வெளுத்து கட்ட போவது போ இருட்டிக்கொண்டு வருகிறது. ஆனால் நமத்து போன பட்டாசை போல பிசுபிசுத்து போய்விடுகிறது. இதே வேகத்தோடு வெயில் தொடர்ந்து அடிக்குமானால் சென்னை சகாராவாக மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


ஆனால் சில நகரங்களில் எப்பொழுதும் இருக்கும் மேக மூட்டமான சோம்பேறித்தனமான சூழ்நிலையோடு ஒப்பிட்டு பார்க்கையில் இந்த வெயில் தேவலாம் என்றே படுகிறது. லண்டனில் ஒரு டாக்ஸி ஒட்டுனர் சொன்னது நினைவுக்கு வருகிறது "எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிக்கொள்ளலாம் ஆனால் வெயிலே இல்லாத ஊரில் இருப்பது மிக கடினம்"

எந்த ஒரு அம்பாஸடர் காரின் பின் சென்றாலும் அந்த கார் வேகம் எடுக்கும் சமயத்தில் குப்பென்று ஒரு கரிமயமான புகயை ந்ம் முகத்தில் தூவி விட்டு செல்கிறது.

டாடா சுமோக்களும், டோயொடா குவாலிஸ்களும் ரோடில் நடமாடும் எமன்கள்

ஏமாத்து வேலை

சென்னையில் எங்கே சென்றாலும் ஏமாந்து விடுவோமோ என்ற பயமே அதிகம் உள்ளது. சர்வீஸ் செய்யும் ஆளில் இருந்து விற்பனை செய்யும் ஆள் வரை அனைவரும் மர்மமான முறையிலேயே செயல்படுகின்றனர்.

ஓரு சின்ன உதாரணம் ஒரு பூ விற்கும் பெண்ணிடம் 3 முழம் பூ வாங்கினேன். கொடுக்கும் பொழுது "நல்லா கட்டியிருக்கேன், அடர்த்தியா" என்று கூறினார்கள். வாங்கி போய் பிரித்து பார்த்தால் வெறும் நார் தான் இருந்தது. இருந்த பூவும் உதிர்ந்து கொண்டே இருந்தது.

வாக்கும் க்ளீனர் சர்வீசுக்கு ஆள் கூப்பிட்டால் அவர் எல்லா விதமான மர்மமான வழிமுறைகளை கற்று தருகிறார்.

At no place we can do shopping confidently. Each salesperson one looks at us either like ilicha vaayan or he treats us like an earthworm. Whenever we ask for the price of an item the way they tell it never makes us confortable. I personally feel the prices of items should be fixed it should not be left to the bargaining skills of the buyer.

Tuesday, May 15, 2007

சண்டை

சிறு வயதில் நான் அதிகமாக தமிழ் நாவல்களை படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ராஜேஷ் குமார், சுபா, பி கே பி இவர்கள் மூவரின் நாவல்களும் அல்வா மாதிரி வெளுத்து கட்டுவேன். இப்பொழுது சில நாவல்களை படித்து வருகிரேன் அவைகள் மிகவும் சாதரணமாக இருப்பதை உணர்கிறேன். ஓன்று அவர்களுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது அல்லது எனக்கு ரசனை மாறிவிட்டது.

இந்தியாவில் சுத்தமாக உயிர்களுக்கு மதிப்பு இல்லை என்பதை சென்னையின் தெருக்களில் பைக்கில் பயணம் செய்தால் தெரிந்துகொள்ளலாம். எல்லாருக்கும் அவசரம். அடுத்தவருகு வழி விட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லை. எங்கே பார்த்தாலும் ஒழுங்கீனம். விதிமுறைகளை பின்பற்றுவதில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் நான் மட்டும் சிக்னலில் நின்றால் என் உயிர் என்னிடம் இருக்காது.

நான் வசிக்கும் வீடு இரயில் தண்டவாளங்களின் அருகே உள்ளது. தண்டவாளத்திண் மறுபுறமும் வீடுகள் உண்டு. இன்று நான் வீட்டை விட்டு கிளம்பும் பொழுது தண்டவாளத்திண் மறுபுறம் ஒரு குடும்ப சண்டை. இரண்டு பெண்கள் நைட்டி உடையில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அடிப்பதை தடுத்து கொண்டு இருந்தார்கள். இப்படி தெரு சண்டையை பார்த்தாலே வாந்தி தொண்டை வரை வரும் எனக்கு.

Monday, May 14, 2007

மழை

கோவிந்தன் வாணத்தை அண்ணாந்து பார்த்தான் மழைக்கான அறிகுறி இல்லை. தன் வலது பக்கத்தில் இருந்த வயலை பார்த்தான் அடித்த வெயிலில் நாற்றுகள் வாடி இருந்தன. கவலை ரேகை கோவிந்தன் முகத்தில் பரவியது.

இரவு கயிற்று கட்டிலில் மனைவி கொடுத்த பழைய சாதத்தை சாப்பிட்டுவிட்டு வானம் பார்த்து படுத்து இருந்தான். பயிற்களின் நினைவு அவனை வாட்டியது. எப்பொழுது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது. சிலீரென்று முகத்தில் ஏதோ பட்டது விருட்டென்று எழுந்தான். வானத்தில் நிலா இல்லை, நட்ச்சத்திரம் இல்லை மழை தூர ஆரம்பித்து இருந்தது.

தூக்கம் கலைந்த சோகம் முற்றிலும் அவன் முகத்தில் இல்லை. அந்த இருட்டிலும் அவன் பற்கள் பளீரென்று அவன் மனைவிக்கு அவன் சிரிப்பினில் தெரிந்தன.

Sivaji

The boss will hit the screens on May 31st. It has been a long wait. It will be alomost 2 months after the song release the movie is going to be released.

All the Best Boss.

Tuesday, May 08, 2007

Accident

Sunday there was a news about an accident. The accident occured at Tambaram Sanitorium. According to The Hindu a guy was crossing the tracks and noticed two girls walking along another track without noticing an approaching train. In the eagerness to warn those girls he didnt notice a train which was coming on his track. Within seconds he was no more.

Life is not considered precious in India. 1000 accidents may happen but there wont be any prevention measures from the authorities.

I have seen a program in BBC where UK official were investigating a car accident. They were putting lot of effort to find out what could have caused the accident so that in future other people can be safe.

In India 1000's of accidents happens because of people crossing tracks. My house is very near to a track and I too used to cross these tracks. I have witnessed lot of accidents. As Indians basically have the mentality to follow certain things only if becomes a strict law, live's can be saved by enforcing laws and constructing pedestrian friendly overbridges. Otherwise we will be loosing many more lives like this.
****

Wordings written on the rear window of a car grabbed my attention yesterday.

It was written "So what? What Next?"

Monday, May 07, 2007

Tired

Weekend staying at home is becoming very tough with Chennai heat turned on. Somedays when the breeze takes pity on us we can survive but on those days when breeze stops we get cooked inside our rooms. When we were kids I dont remember complaining much about the heat. Infact we will always be in the street during peak summer.

One day's rain made the Madipakkam road into a slush. With pits dug for BAATHALA SAAKADAI the road was totally unusable. But the speeding morons speed whatever the condition of the road.

On the other roads taking OMR can be called suicide because its a definite death.
ECR is equivalent to Accident, chances of survival is there.
Madipakkam road is a safe bet as vehicles cant go beyond 3rd gear and 30 kms.

Suddenly I feel the cost of living in chennai has increased I dont know how others feel.

A Simple Plan and Just Mercy